இந்திய டெலிகாம் சந்தையில் கடுமையான வர்த்தகப் போட்டி நிலவி வருகிறது. ஒருபக்கம் வாடிக்கையாளர்களுக்காகவும், வர்த்தக விரிவாக்கத்திற்காகவும் ஏர்டெல் மற்றும் ஜியோ கடுமையான போட்டியை எதிர்கொண்டு வரும் நிலையில் மறுமுனையில் வோடபோன் ஐடியா நிறுவனம் இருக்கும் வர்த்தகத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும், தொடர்ந்து சேவையை அளிக்கவும் நிதி திரட்டி வருகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
3 மாதம் தொடர் வளர்ச்சி
ஏர்டெல் மற்றும் ஜியோ மத்தியிலான போட்டியில் யார் அதிக வாடிக்கையாளர்களைப் பெறுகிறார்கள் என்பது மிகவும் முக்கியமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 3 மாதமாக ஜியோவை பின்னுக்குத்தள்ளி ஏர்டெல் தொடர்ந்து அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறது.
ஜியோ Vs ஏர்டெல்
அதிகளவிலான வாடிக்கையாளர்களை வைத்துள்ளது மூலம் ஜியோ தொடர்ந்து வையர்லெஸ் வர்த்தகத்தில் முதன்மை நிறுவனமாக உள்ளது. ஜூலை 2020 வரையிலான காலகட்டத்தில் ஏர்டெல் 33 லட்ச வாடிக்கையாளர்களைப் பெற்ற நிலையில், ஜியோ 36 லட்ச வாடிக்கையாளர்களைப் பெற்றது. ஆனால் இதன் பின்பு 3 மாதம் தொடர்ந்து வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் ஏர்டெல் முதன்மையாக உள்ளது.
ஜூலை முதல் அக்டோபர் 2020
இந்நிலையில் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் ஏர்டெல் 1.36 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது, ஆனால் ஜியோ அதிகளவிலான சேவையை விரிவாக்கம் செய்யும் 91 லட்ச வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை வர்த்தகம் ஜூலை முதல் அக்டோபர் காலகட்டத்தில் 0.56 சதவீதம் அதிகரித்துள்ளது.
வோடபோன் ஐடியா
மறுமுனையில் வோடபோன் ஐடியா ஜூலை முதல் அக்டோபர் காலக்கட்டத்தில் 27 லட்ச வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதோடு அரசு டெலிகாம் சேவை நிறுவனங்களான பிஎஸ்என்எள் 10,208 வாடிக்கையாளர்களையும், எம்டிஎன்எல் 7,307 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது.
கொரோனா லாக்டவுன்
ஏர்டெல் மே மாதத்தில் இருந்து பெரிய ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் தடாலடியாக உயர்ந்துள்ளது. கொரோனா லாக்டவுன் காரணத்தால் மே மாதம் 40 லட்ச வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல் ஜூலை மாதம் 3 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்ந்துள்ளது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக