Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 23 டிசம்பர், 2020

💪 🌱 🔫 - இது என்ன-னு உங்களுக்கு தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------------

காமெடி கலாட்டா...!!

------------------------------------------------

பாபு : இன்னைக்கு பேங் லீவு. இல்லைன்னா பணம் கிடைச்சிருக்கும்.

கோபு : பேங்க்ல அக்கௌன்ட் வெச்சிருக்கியா?

பாபு : இல்ல.. இல்ல.. பேங்க் கிளார்க் கிட்ட கடன் வாங்குவேன்.

கோபு : 😄😄

-----------------------------------------------------------------------------

தளபதி : போர் தொடங்க இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு... ஏன் இன்னும் நமது ஆயுதக் கிடங்கை திறக்கவில்லை?

வீரன் : நமது அரசர் அதுக்குள்ளேதான் ஒளிஞ்சுக்கிட்டிருக்காரு... எப்படி திறப்பது?

தளபதி : 😐😐

-----------------------------------------------------------------------------

ராமு : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேத்து கொடுங்க..

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர முடியாது...!

ராமு : 😖😖 

-----------------------------------------------------------------------------

படத்திற்கேற்ற பழமொழியை சொல்லுங்க...!!

-----------------------------------------------------------------------------

💎 👨 🌱 👨

💪 🌱 🔫

😩 👶 🍼

👩 👶 ➰ 👗

🏠 🐀 🌇 🐅

விடைகள் கீழே👇

-----------------------------------------------------------------------------

வாழ்க்கை...!!

-----------------------------------------------------------------------------

விடை தேடிய பயணம் தான் வாழ்க்கை.

சிலருக்கு விடை தெரியவில்லை,

பலருக்கு வினாவே புரியவில்லை. 

வானம் ஒரே மாதிரி இருந்தாலும், வானிலை ஒரே மாதிரி இருப்பதில்லை.

வாழ்க்கையும் அப்படித்தான்.

சந்தேகம் தரும் எண்ணங்களை நீக்கி, நம்பிக்கை தரும் எண்ணங்களை சேர்த்தால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

-----------------------------------------------------------------------------

அர்த்தம் அறிவோம்...!!

-----------------------------------------------------------------------------

அங்குஷ்டம் - பெருவிரல்

தர்ஜனி - சுட்டுவிரல் (ஆட்காட்டி விரல்)

மத்தியமம் - நடுவிரல்

அனாமிகை - ஆழிவிரல் (மோதிர விரல்)

கனிஷ்டம் - கடை விரல் (சுண்டுவிரல்)

-----------------------------------------------------------------------------

விடைகள் :

1. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்.

2. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

3. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.

4. தாயை போல பிள்ளை, நூலை போல சேலை.

5. வீட்டுல எலி, வெளியில புலி.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக