பெருந்தன்மையான பேச்சுக்களால் அனைவரையும் கவரும் கும்ப ராசி அன்பர்களே..!!
புதிய திட்டங்களை எதிர்பார்த்த விதத்தில் நிறைவேற்றுவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்களும், தடுமாற்றங்களும் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். பயணங்களின்போது உடமைகளிலும், உடல் ஆரோக்கியத்திலும் கவனம் வேண்டும்.
உடல் ஆரோக்கியம் :
ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தோற்றப்பொலிவுடன் காணப்படுவீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். குளிர்ச்சியான பொருட்களை குறைந்த அளவு உண்பது நல்லது.
திருமண வாழ்க்கை :
மனதிற்கு விரும்பிய விதத்தில் மகிழ்ச்சியான, ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். கணவன், மனைவிக்கிடையே பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நன்மையை தரும். அயல்நாடு தொடர்பான பயணங்கள் ஏற்படும். சந்தேக உணர்வுகளை தவிர்த்து உண்மையை புரிந்து முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.
மாணவர்கள் :
மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து எழுதி பார்ப்பது நல்லது. கணிதம் மற்றும் வேதியல் தொடர்பான பாடங்களில் சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் அடிக்கடி நினைவில் கொள்வது நல்லது.
உத்தியோகஸ்தர்கள் :
புதிய வேலை மற்றும் உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். அரசு தொடர்பான காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
வியாபாரிகள் :
பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி பொருட்சேர்க்கைகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதிரி பாகங்கள் தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபங்கள் உண்டாகும்.
கலைஞர்கள் :
கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு சமூகத்தில் பெரிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் :
அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்கள் இதமான பேச்சுக்களை பயன்படுத்துவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். அவ்வப்போது தேவையற்ற விமர்சனங்கள் உங்களின் மீது ஏற்பட்டு மறைந்த வண்ணமாக இருக்கும். ஆகவே, பொறுமையுடன் எதிர்கொள்வது நல்லது.
நன்மைகள் :
எதிர்பாராத நண்பர்களுடைய உதவி, வெளிநாட்டு தொடர்பான பயணங்களினால் நிலுவையில் இருந்துவந்த செயல்பாடுகளை முடித்து கொள்வதற்கான சூழ்நிலைகள் சாதகமாக கிடைக்கப்பெற்று, முன்னேற்றத்தை நோக்கி செல்லக்கூடிய கும்ப ராசி அன்பர்களுக்கு நித்ரா குழுமத்தின் நல்வாழ்த்துக்கள்.
கவனம் :
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்துக்களையும், வாக்குவாதங்களையும் தவிர்ப்பதன் மூலம் உறவுகளிடத்தில் நன்மதிப்பையும், ஆதரவையும் ஏற்படுத்தி கொள்ள முடியும்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் பசுமாட்டினை (கோ) வழிபாடு செய்து வர ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக