உலகின் மிக பழமையான வாகன உற்பத்தி எவை என்பது பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.
உலகின் மிகவும் பழமையான வாகன உற்பத்தி நிறுவனங்கள் எது?, எத்தனை இருக்கின்றன? என உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். மிகப்பெரிய கார் காதலர்கள்கூட இதுகுறித்த தகவலை அறியாத வண்ணம் இருக்கின்றன. அதேசமயம், இதுகுறித்த தெரிந்து கொள்ளலாம் என தேடினாலும் எதிர்பார்த்த தகவல்கள் கிடைப்பதில்லை.
இந்த குறையைப் போக்கும்விதமாக உலகின் மிகவும் பழைமையான வாகன உற்பத்தி நிறுவனங்கள் ப ற்றிய சுவாரஷ்ய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இதில், ஓர் நிறுவனம் 1810ம் ஆண்டில் இருந்து செயல்பாட்டில் இருக்கின்றது என சொன்னால் உங்களால் நம்ப முடிகின்றதா?, இந்த நிறுவனமே உலகின் முதல் மற்றும் மிக மிக பழமையான வாகன உற்பத்தி நிறுவனம்.
இதுபோன்ற சுவாரஷ்ய தகவல்களை இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம். அதேசமயம், நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சில நிறுவனங்கள் ஆரம்பத்தில் வாகனங்களுக்கான உதிரிபாகங்களை மட்டுமே உற்பத்தி செய்யும் நோக்கில் களமிறங்கி, பின்னாளில் வாகன நிறுவனமாக மாறியிருக்கின்றன. அதுகுறித்த தகவலையும் கீழே பார்க்கலாம்.
7. ரெனால்ட்:
மூன்று சகோதரர்களால் தொடங்கப்பட்ட நிறுவனமே ரெனால்ட். 1899ம் ஆண்டிலேயே இந்நிறுவனம் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஃபெர்னான்ட், லூயிஸ் மற்றும் மார்சல் ரெனால்ட் ஆகியோரால் ஃபிரான்ஸை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனமே இது. இதில், லூயிஸ் டிசைன் மற்றும் கட்டுமான பணியையும், ஃபெர்னான்ட் மற்றும் மார்சல் ஆகியோர் தொழில் மற்றும் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
தற்போது கார் தயாரிப்பில் புகழ்பெற்ற நிறுவனமாக இது தென்பட்டாலும், ஆரம்பத்தில் பேருந்து, லாரி மற்றும் பிற வர்த்தக வாகனங்களுக்கான கட்டுமான பணிகளையும் இது மேற்கொண்டு வந்தது. தொடர்ந்து வேர்ல்ட் வார் 1ன் போது ராணுவத்திற்கு தேவையான வாகனங்கள் மற்றும் பிற எந்திரங்களை இது தயார்படுத்திக் கொடுத்தது.
இதுமட்டுமின்றி, பின்னாளில் விவசாயம் மற்றும் தொழல்துறைகளுக்கு ஏற்ற கருவிகளை தயாரிக்கும் பணியில் அது ஈடுபட்டது. இவ்வாறு, அனைத்திலும் சிறப்பாக பணியாற்றிய நிலையிலேயே தற்போது கார் தயாரில் அது தீவிரத்துடன் அது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது உலகில் 100க்கும் அதிகமான நாடுகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது.
6. லேண்ட் ரோவர்:
இங்கிலாந்து நாட்டின் முதல் கார் தயாரிப்பு நிறுவனம் இதுவே ஆகும். இந்த நிறுவனம் 1896ம் ஆண்டிலேயே அறிமுகமானது. முன்னதாக லேன்காஷைர் ஸ்டீம் மோட்டார் கம்பெனி எனும் பெயரிலேயே இந்நிறுவனம் அழைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பல்வேறு மாற்றங்களுக்கு பின்னர் லேண்ட் ரோவர் எனும் பெயரை 1978ம் ஆண்டில் வைக்கப்பட்டது.
முன்னதாக நீராவியால் இயங்கக்கூடிய எந்திரங்களை இந்த நிறுவனம் தயாரித்து வந்தது. எனவேதான் ஸ்டீம் மோட்டார் கம்பெனி என்ற பெயர் அதன் முன்னதாக நிறுவனத்தின் பெயருடன் சேர்க்கப்பட்டு அழைக்கப்பட்டு வந்தது. இதையே பின்னாளில் இங்கிலாந்து நாட்டு நிறுவனம் மாற்றியமைத்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படத்தக்கூடிய அதிகபட்ச விலையில் விற்கப்பட்டு வருகின்றது.
5 ஸ்கோடா ஆட்டோ:
பொஹிமியா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், ஆரம்பத்தில் மோட்டார்சைக்கிள் மற்றும் மிதிவண்டிகளை மட்டுமே தயாரித்து வந்தது. மேலும், லாரின் மற்றும் க்ளமென்ட் எனும் பெயரிலேயே இந்நிறுவனம் அழைக்கப்பட்டு வந்தது. இதையடுத்தே 1905ம் ஆண்டில் ஸ்கோடா ஆட்டோ எனும் புதிய காரில் கார் தயாரிப்பில் அது களமிறங்கியது.
4. மெர்சிடிஸ் பென்ஸ்:
சொகுசு வாகன தயாரிப்பில் பெயர்போன நிறுவனமாக மெர்சிடிஸ் பென்ஸ் இருக்கின்றது. தற்போதும் சொகுசு கார் விற்பனையில் இந்நிறுவனம் கொடி கட்டி பறந்துக் கொண்டிருக்கின்றது. இந்நிறுவனம் இரு நிறுவத்தின் கூட்டணியில் உருவாகிய ஒன்று. 1890ம் ஆண்டில் தொடங்கப்பட்ட டைம்லர் மற்றும் 1883ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பென்ஸ் & சை ஆகிய நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டதே மெர்சிடிஸ் பென்ஸ்.
ஆரம்பத்தில் பெட்ரோலால் இயங்கும் எஞ்ஜின்களையே இந்நிறுவனம் உருவாக்கி வந்தது. இரு நிறுவனங்களின் இணைவை அடுத்து 1926ம் ஆண்டில் இருந்து வாகன தயாரிப்பில் ஈடுபட தொடங்கியது
3. ஒபெல் ஆட்டோமொபைல்ஸ் ஜிஎம்பிஎச்:
ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் மற்றுமொரு வாகன உற்பத்தி நிறுவனமே ஒபெல். இது ஆரம்பத்தில் தையல் மிஷின் தயாரிப்பிலேயே ஈடுபட்டு வந்தது. இதையடுத்து 1886ம் ஆண்டில் சைக்கிள் தயாரிப்பிலும், 1899ம் ஆண்டில் இருந்தே வாகன தயாரிப்பில் இது களமிறங்கியது.
1913ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்களில் ஒருவராக இது உருவெடுத்தது. குறிப்பாக, 1930ம் ஆண்டில் ஐரோப்பிய கார் தயாரிப்பாளர்களிலேயே முதன்மையான மாபெரும் வாகன தயாரிப்பாளராக இது உருமாறியது.
2. டாத்ரா:
சிசெக் ரிபப்ளிக் நாட்டின் முதல் ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனம் டாத்ரா. இந்நிறுவனம், இதன் முதல் காரை 1897ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்தது. முன்னதாக டிரக் மற்றும் டேங்கர் வாகனங்களை மட்டுமே இது தயாரித்து வந்தது. இந்த வாகனங்களே வேர்ல்ட் வார் 2-ன் போது ஜெர்மனி பயன்படுத்தியது. இதையடுத்து 1999ம் ஆண்டில் கார் தயாரிப்பை கைவிட்டுவிட்டு முழு நேர டிரக் தயாரிப்பாளராக மாறியது.
1. பீஜோ:
உலகின் மிகவும் பழைமையான கார் தயாரிப்பு நிறுவனம் எது என்றால் அது பீஜோ (Peugeot)தான். இந்த நிறுவனம் 1810ம் காப்பிகொட்டை தயாரிக்கும் மில்-லினை நடத்தி வந்தது. இதையடுத்து 1830ம் ஆண்டே மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் அது களமிறங்கியது. தொடர்ந்து, 1882 ம் ஆண்டில் இருந்து தற்போது வரை கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிறுவனம் லியோன் செர்பால்லட் நிறுவனத்துடன் இணைந்தே அதன் முதல் காரை இந்த உலகில் அறிமுகப்படுத்தியது. இது நல்ல வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து, இந்த கூட்டணிகளே பன்ஹார்ட்-டைம்ளரின் எஞ்ஜினைப் பயன்படுத்தி புதிய புதிய கார்களை களமிறக்கின.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக