Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 23 டிசம்பர், 2020

உஷார்! இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..!

 இன்சூரன் கிளம்ப் செய்யும் போது செய்யகூடியவை செய்ய கூடாதவை

டிரைவிங் என்பது நமக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தருவது தான். ஆனால் இந்த பயணத்தின் போது விபத்து என்பது எதிர்பார்க்காத ஒன்று. ஒருவர் வாகனத்தில் செல்லும் போது விபத்து நடக்காமல் இருக்கும் என யாராலும் உறுதியாளிக்க முடியாது.

விபத்து என்பது நீங்கள் போய் ஒருவர் மீது மோதுவது மட்டும் அல்ல உங்கள் கார் மீது மற்றவர் வந்து மோதுவது, நீங்கள் நிறுத்தி சென்ற கார் மீது வேறு ஒரு வாகனம் வந்து மோதுவது. ஏன் நிறுத்தி சென்ற வாகனம் மீது மரஙம் விழுந்து சேதமாவது. மழை வெள்ள நீரில் உங்கள் வாகனம் முழ்குவது என எல்லாமே விபத்துதான்.

இந்த விபத்துக்களால் ஏற்படும் நஷ்டத்தை ஒரளவிற்கு சமாளிக்கவும், உங்கள் வாகனத்தால் பிறருக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யவும் இந்த இன்சூரன்ஸை கட்டாயமாிக்கியுள்ளது. இந்த இன்ஸ்சுரன்ஸை பலர் எடுத்தும் அதை முறையாக கிளைம்ப் செய்தாதால் அவர்களுக்கு அதற்கான பலன் கிடைப்பதில்லை. இந்த செய்தியில் இன்சூரன்ஸின் கிளம்ப் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதை பார்க்கலாம் வாருங்கள்

செய்யக்கூடியவை

எப்.ஐ.ஆர்.

ஒரு பெரும் விபத்திற்கான அல்லது மூன்றாம் நபருக்குகான இன்சூரன்ஸ் பணத்தை கிளம்ப் செய்ய போலீசில் விபத்து குறித்து புகார் செய்து அது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம் அப்பொழுது தான் இன்சூரன்ஸ் பெற இந்த சம்பவம் தகுதி பெறும். இது எந்த வகையான வாகன இன்சூரன்ஸ் ஆக விபத்துக்களுக்கு எப்.ஐ.ஆர் பதிவு என்பது அவசியம்.



மிகச்சிறிய விபத்துகளுக்கு எப்.ஐ.ஆர் தேவையில்லை. பெரும் விபத்துக்கள், உயிரிழப்பு ஏற்படும் விபத்துக்கள், காயங்கள் ஏற்படும் வகையிலான விபத்துக்களுக்கு எப்.ஐ.ஆர் கட்டாயம் போடப்பட வேண்டும். கார் திருட்டிற்கும் கட்டாயம் எப்.ஐ.ஆர். போடபட்டிருக்க வேண்டும். இந்த எப்.ஐ.ஆரின் ஒரு காப்பியை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒரு காப்பியை உங்களிடமும் வைத்துக்கொள்ளுங்கள்.

தகவல் அளிப்பது முக்கியம்

உங்கள் வாகனம் விபத்தில் சிக்கினால் விரைவாக இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட வேண்டியது அவசியம் அதிகபட்சம் 7 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்படவேண்டும். சில நிறுவனங்கள் இதற்குள் குறைவான கால அளவையே நிர்ணயித்துள்ளனர். சில நிறுவனங்கள் 24 மணி நேரம் சில நிறுவனங்கள் 48 மணி நேரங்கள் கூட நிர்ணயித்துள்ளன.

இதனால் முடிந்த அளவிற்கு சிக்கிரமாக உங்கள் வாகனம் விபத்திற்குள்ளான சம்பவத்தை உடனடியாக இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரிவித்து விடுங்கள். சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்கள் வாகனத்தை டோ செய்து செல்லும் வசதி, பிக்கப் செய்யும் வசதிகளையும் வழங்குகிறது. அதையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஆவணங்களை சமர்பித்தல்

இன்சூரன்ஸ் பணத்தை கிளம்ப் செய்யக்கூடிய பணிகள் நீங்கள் போதிய ஆவணங்களை சமர்பிக்காதவரை துவங்காது. இதனால் விபத்து குறித்த தகவல்களை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்கும் போதே இன்சூரன்ஸ் பணத்தை கிளம்ப் செய்ய தேவையான ஆவணங்கள் குறித்தும் அதற்கான கால அவகாசம் குறித்தும் கேட்டு தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.


பொதுவாக மோட்டார் கிளம்ப் பார்ம். இன்சூரன்ஸ் பாலிசி, ஆர்சி புக், விபத்து நடக்கும் போது வாகனம் ஓட்டியவரின் டிரைவிங் லைசன்ஸ் ஆகிய ஆவணங்கள் தான் சமர்பிக்க வேண்டியது இருக்கும். இதில் ஒரு ஆவணம் தவறினால் கூட இன்சூரன்ஸ் பணம் கிளம்ப் ஆகாமல் போய்விடும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.


விபத்து ஆதாரம்

விபத்து நடந்த சம்பவத்தை முடிந்தால் உங்கள் செல்போனிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சாதனத்திலோ படம் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். இது. இன்சூரன்ஸ் பணம் கிடைக்க ஒரு ஆதாரமாக இருக்கும். செல்போனில் வீடியோவும் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

இந்த வீடியோவில் உள்ள கார் என் தெரியும் படியாக பார்த்துக்கொள்ளுங்கள். மேலும் விபத்தின் சாட்சியாக இருந்தவர்கள், அல்லது விபத்து ஏற்படுத்தியவர்கள் இருந்தால் அவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் இன்சூரன்ஸ் பணம் கிளம்ப் செய்யும் போது தேவைப்படலாம்.


பாலிசி டாக்குமெண்ட்

நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்கும் போது பாலிசி பத்திரத்தை கவனமாக வாசிக்க வேண்டும் அதில் உள்ள விதிமுறைகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எந்தெந்த வகையிலான விபத்துக்கள் எல்லாம் இந்த பாலிசியில் கவர் ஆகும்.

எந்த விபத்துக்கள் ஆகாது என்பது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். உங்கள் வாகனம் விபத்திற்குள்ளானல் அது இன்சூரன்ஸ் படி கிளம்ப் ஆகுமா ஆகாத என்பதை முன்பே உங்களுக்கு தெரிந்திருந்தால் அதற்கு தகுந்தார் போல் நீங்கள் செயல்பட முடியும்.


செய்யக்கூடாதவை

வாகனத்தை அகற்றாதீர்கள்

நீங்கள் விபத்து ஏற்பட்டால் விபத்து குறித்த போதிய ஆதாரங்களை சேகரிக்கும் வரை வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தாதீர்கள். இதனால் உங்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைப்பதில் தாமதமோ, அல்லது குறைந்த அளவிலான இன்சூரன்ஸ் பணமோ கிடைக்ககூடும். சில நேரம் காரணமாக கூட இன்சூரன்ஸ் பணம் முழுவதும் ரத்தாகலாம். என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

அதே போல இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்த பின்புதான் வாகனத்தை சரி செய்ய வேண்டும். அதற்கு முன் வாகனம் ரிப்பேர் செய்யப்பட்டால் இன்சூரன்ஸ் கிளம்ப் முழுவதும் ரத்தாகி போக வாய்ப்புள்ளது. இதனால் இன்சூரன்ஸை நிறுவனத்திடம் இது குறித்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

உண்மைகளை மறைத்தல்

விபத்து ஏற்பட்டவுடன் எவ்வாறு விபத்து நடந்தது என்பதை உண்மையாக நிறுவனங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நீங்கள் ஏற்படுத்திய விபத்திற்கு கிளம்ப் கிடைக்காது என்பதை அறிந்து கிளம்ப் கிடைக்கும்படியாக சில பொய்களையோ சில உண்மைகளை மறைந்தோ தகவல்களை சொல்ல கூடாது.

அவ்வாறு நீங்கள் உண்மைகளை மறைத்ததையோ, பொய்கள் சொல்லியதையோ இன்சூரன்ஸ் நிறுவனத்தார் கண்டுபிடித்தார்கள் என்றால் உங்கள் பாலிசி முழுமையாக ரத்து செய்யப்படும், மேலும் நீங்கள் செலுத்திய கிளம்ப் தொகையும் கிடைக்காது.

மூன்றாம் நபருடன் சமரசம் செய்யாதீர்கள்

உங்கள் காரை நீங்கள் விபத்து ஏற்படுத்தாமல் மற்றவர்கள் செய்த தவறால் விபத்து நடந்தால், சிலர் உங்களை வந்து இந்த சம்பவத்தை போலீசிற்கோ இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கோ தெரியபடுத்தவேண்டாம் நாமே முடித்து கொள்ளலாம் என சமரசம் பேசினால் அவர்களுடன் ஒத்து போகாதீர்கள்.

இன்சூரன்ஸ் பணத்தை கிளம்ப் செய்ய எப்.ஐ.ஆர் அவசியம் என்பதால் இந்த விபத்தை நிச்சயமாக முறையாக பதிவு செய்யுங்கள். நீங்கள் சமரசம் செய்துகொண்டால் இன்சூரன்ஸ் பணம் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருக்கும்.

வாக்குமூலம் வேண்டாம்

உங்கள் பாலிசி தொகை ஏதோ சில காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டால், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு எதுவும் எழுதி கையெழுத்திட தேவையில்லை. ரத்து செய்த கிளம்பை ரிவியூ செய்ய உரிமை உள்ளது. எதுவும் எழுதி கொடுக்க நேர்ந்தால், அதை உங்கள் சட்ட ஆலோசகரிடம் ஆலோசித்த பின்பு அதை செய்யுங்கள்.

 
 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக