இந்தியாவில் கார் வாங்கும் பெரும்பாலானோர் கார் லோன் மூலமே கார்களை வாங்குகின்றனர். இந்த கார்லோனை மாத தவணை மூலம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் போது இப்படி லோனில் வாங்கிய கார் திடீர் என விபத்தில் சிக்கி முழு காரும் மீட்க முடியாத அளவிற்கு சேதமடைந்தால் அந்த லோன் என்ன ஆகும் யார் அதை யார் கட்ட வேண்டும் என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு இருக்கிறது.
கார்கள் விபத்தில் சிக்கினால் லோன்கள் பற்றி பார்க்கும் முன் கார்களின் இன்சூரன்ஸ் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு காருக்கும் அந்த மாடல் வாங்கப்பட்டவருடம், தற்போது உள்ள கண்டிஷனை வைத்து ஒரு குறிப்பிட்ட தொகை இன்சூரன்ஸ் தொகையாக மதிப்பிடப்படும்.
தற்போது உள்ள கார் விபத்தில் சிக்கினால் அந்த தொகைக்கு உட்பட்ட பணத்தை உங்களுக்கு அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும். அதன் மூலம் நீங்கள் காரை சரி செய்துவிட்டு வேறு ஒரு இன்சூரன்ஸை பெற்று கெள்ளலாம். இதில் ஒட்டு மொத்தமாக சேதமான காரை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒருவகையாக வகைப்படுகத்துகின்றனர்.
அதாவது காரின் விபத்திற்கு சிக்கும் முன் அதன் மதிப்பில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரையில் மதிப்பிடப்படும் சேதராங்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் பொறுப்பேற்று அதை சரி செய்யும் பணத்தை வழங்கிவிடும். ஆனால் அந்த குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் சென்றால் காரை ஒட்டு மொத்த சேதாரம் ஆனாதாகவே இன்சூரன்ஸ் நிறுவனத்தால் கருதப்படும்.
இந்த குறிப்பிட்ட சதவீதம் என்பது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும் பெரும்பாலான நிறுவனங்கள் 80 சதவீதத்தை எல்லையாக வைத்துள்ளனர். அதாவது உங்கள் கார் விபத்தில் சிக்கும் முன் அதன் மதிப்பில் இருந்து 80 சதவீதம் வரை சேதாரம் ஆனால் மட்டுமே அவர்கள் அதை சரி செய்வதற்கான காசை வழங்குவார்கள். அதற்கும் அதிக மதிப்பில் சேதாரம் ஆனால் ஓட்டுமொத்த நஷ்டமாகவே கருதுவார்கள்.
இப்படி ஒட்டு மொத்த நஷ்டமான கார்களுக்கு இன்சூரன்ஸ் தொகை முழுமையாக வழங்கப்படும். ஆனால் நீங்கள் ஒட்டுமொத்த நஷ்டத்தை ஏற்படுத்திய வாகனத்தை கட்டாயம் அங்கிகரிக்கப்பட்ட ஸ்கிராப் சென்டர்களில் ஸ்கிராப் செய்ய வேண்டும். ஸ்கிராப் செய்யப்படும் வாகனங்களுக்கு ஒரு குறிப்பட்ட தொகையை அந்நிறுவனம் வழங்கும். அது மட்டும் இல்லாமல் இந்த வாகனம் ஸ்கிராப் செய்யப்பட்டது, அதற்காக இவ்வளவு பணம் வழங்கப்பட்டது என அந்நிறுவனம் சான்றிதழ் வழங்கும்.
அந்த சான்றிதழை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பட்சத்தில் உங்கள் வாகனத்திற்காக ஒட்டு மொத்த இன்சூரன்ஸ் பணத்தில் இருந்து உங்கள் வாகனத்தை ஸ்கிராப் செய்வதற்காக வழங்கப்பட்ட பணத்தை கழித்து மற்ற பணம் அப்படியே உங்களுக்கு வழங்கப்படும் சில நிறுவனங்கள் மட்டும் செயல்பாட்டு கட்டணம் என்று சிறிய அளவிலான தொகை கழித்து கொள்கின்றனர்.
இப்பொழுது கார் லோனிற்கு வருவாேம், கார் லோன் என்பது உங்களிடம் உள்ள காரின் மதிப்பை பொருத்து உங்களுக்காக வழங்கப்படும் கடன் தான். அதனால் கார் விபத்திற்கும் கார் லோனிற்குள் எந்த வித சம்மந்தமும் இல்லை.
இதனால் உங்கள் கார் முழு சேதாரத்தை சந்தித்தால் நீங்கள் அந்த காரை ஸ்கிராப் செய்து அதன் பின் கிடைக்கும் இன்சூரன்ஸ் தொகையை கொண்டு உங்களுக்கான கார் கடனை அடைக்கலாம்.
பெரும்பாலும் நீங்கள் கார் வாங்கும் போது வாங்கிய கடனை தொடர்ந்து செலுத்தி கொண்டே தான் வருவீர்கள் விபத்திற்கு பின் மொத்த கடனையும் நீங்கள் அடைக்க வேண்டிய சூழ்நிலை இருக்காது. அதன்காரணமாக இந்த இன்சூரன்ஸ் தொகை கார் கடனை அடைக்க போதுமானதாக இருக்கும்.
அதுவும் விபத்திற்கு முன் காரின் மதிப்பில் இருந்து பெரும்பாலான நிறுவனங்கள் 80 சதவீதம் வரை காரை சரி செய்ய பணம் வழங்குவதால் விபத்தில் சிக்கும் பெரும்பாலான கார் சரி செய்யப்படும் அளவிற்கே சேதாரம் ஆகிறது. மிக மோசமான விபத்துக்களில் சிக்கிய கார்களுக்கு தான் இந்த சிக்கல்
மொத்தத்தில் உங்கள் கார் விபத்திற்குள்ளாவதற்கும் காருக்கான லோனிற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. நீங்கள் இந்த லோனை கட்டாயம் அடைத்தே ஆக வேண்டும். இன்சூரன்ஸ் மூலம் கிடைக்கும் பணம் மொத்த லோனையும் அடைக்க போதுமானதாக இருந்தால் நீங்கள் அதை நிச்சயம் செய்யலாம்.
ஒரு வேளை நீங்கள் உங்கள் காருக்கு இன்சூரன்ஸே எடுக்கவில்லை என்றால் நிச்சயம் அந்த காருக்கான லோன் முழுவதையும் நீங்கள் தான் கட்ட வேண்டும். இதனால் நீங்கள் உங்கள் காருக்கான இன்சூரன்ஸ் காலம் முடிகிறதென்றால் கட்டாயமாக உடனடியாக காரின் இன்சூரன்ஸை புதுப்பித்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அதன் விளைவு பெரிய விதத்தில் கூட அமைந்து விடும்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக