👉 தனுசு ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். தேவர்களின் குருவுடன், அசுர குருவான சுக்கிராச்சாரியார் சமம் என்ற நிலையில் நின்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
👉 எப்போதும் தன்னைப் பற்றிய சிந்தனைகளையும், தனக்கு வேண்டியதை பற்றியும் யோசிக்கக்கூடியவர்கள்.
👉 பொதுநலத்தில் ஆதாயம் இருந்தால் மட்டுமே ஈடுபடக்கூடியவர்கள்.
👉 இவர்களின் செயல்பாடுகளை அறிந்துக்கொள்வது கடினம். சரியான அழுத்தக்காரர்கள்.
👉 கபட நாடகத்தில் வல்லவர்கள். தன் பேச்சால் எவரையும் வீழ்த்திவிடுவார்கள்.
👉 இவர்களுக்கு மறைமுகமாக எதிர்ப்புகள் இருக்கும்.
👉 பங்காளிகளின் சாதகமற்ற சூழலால் வம்பு வழக்குகள் ஏற்படக்கூடும்.
👉 கடனால் பல சமயங்களில் தர்ம சங்கடமான சூழல் ஏற்படும்.
👉 பல நேரங்களில் கவனக்குறைவுகளால் பொருள் இழப்பு நேரிடலாம்.
👉 அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
👉 கௌரவத்திற்காக எதையும் சிந்திக்காமல் கடன் வாங்கி செலவு செய்யக்கூடியவர்கள்.
👉 எதிலும் அலட்சிய குணம் உடையவர்கள். தனக்கு தெரிந்தது போல் அனைத்திலும் முந்திக்கொள்வார்கள்.
👉 இவர்களின் மூத்த சகோதரர்களால் சாதகமற்ற சூழலே நிலவும்.
👉 வருமானமும், செலவும் சரிசமமாக இருக்கும்.
👉 நிலையற்ற எண்ணங்களால் பிரச்சனைகளே அதிகம் உண்டாகும்.
👉 வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
👉 இவர்களின் அறிவும், ஞானமும் இவர்களுக்கு தகுந்த நேரத்தில் பயன்படாது.
👉 சந்தேக குணத்தால் உடன் இருப்பவர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக