பப்ஜி விளையாட்டு எப்போது அறிமுகம் என்ற கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
பிரதான விளையாட்டுகளில் பப்ஜி
இந்தியா கேம் பிரியர்களிடையே மிகவும் பிரபலமைந்த ஒன்று பப்ஜி. இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்ட நாளில் இருந்து இந்த விளையாட்டை மீண்டும் இந்தியாவில் கொண்டுவர நிறுவனம் சார்பில் ஏணைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
பப்ஜி மொபைல் இந்தியா எப்போது அறிமுகம்
பப்ஜி கார்ப்பரேஷன் தரப்பில் இருந்து மீண்டும் அறிமுகம் செய்யும் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. பப்ஜி மொபைல் இந்தியாவில் சந்தைப்படுத்துவது தொடர்பாக அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து பல டீசர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டது. அதில் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அறிமுகத்திற்கு காத்திருந்த ரசிகர்கள்
இருப்பினும் இதுவரை எந்த ஒரு டீசரும் நாட்டில் எப்போது இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. பப்ஜி மொபைல் இந்தியா பதிப்புக்கான முன்பதிவு திறக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. பப்ஜி மொபைல் மீண்டும் எப்போது வரும் அதன் ரசிகர்கள் காத்திருந்தனர்.
அனைத்து பாதுகாப்பு அம்சங்களோடு அறிமுகம்
பப்ஜி விளையாட்டில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய அரசின் பாதுகாப்பு அம்சத்துக்கு ஏற்ப அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி பப்ஜி இந்தியா என்ற பெயரிலேயே அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு
இந்த தகவல் தொடர்ந்து வெளியான வண்ணமாக இருந்தது. இதையடுத்து இதன் உண்மை தன்மை குறித்து அறிவதற்கு ஜெம் ஸ்போர்ட்ஸ் மற்றும் மீடியா நாமா தரப்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பப்பட்டது.
பப்ஜிக்கு அனுமதி வழங்கப்படவில்லை
இந்த மனுக்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் பதிலளித்தது, அதில் பப்ஜிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை எனவும் மத்திய அரசின் நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை தடை தொடருவதாகவும் தெரிவித்துள்ளது.
FAU-G என்ற மற்றொரு உள்நாட்டு விளையாட்டு
பப்ஜி மொபைலுக்கு தடை தொடர்வது தொடர்பான அரசு அறிவிப்பால் ரசிகர்கள் தொய்வடையத் தேவையில்லை. FAU-G என்ற மற்றொரு உள்நாட்டு விளையாட்டு விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த விளையாட்டு இந்தியர்களிடையே பெரும் வரவேற்பு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக