Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 21 டிசம்பர், 2020

மின்சாரப் பற்றாக்குறையால் தவிக்கும் சீனா? காரணம் என்ன?

மின்சாரப் பற்றாக்குறையால் தவிக்கும் சீனா? காரணம் என்ன?

மின்சாரத் தட்டுப்பாட்டால் சீனா நிலைகுலைந்து போயிருக்கிறது. சீனாவில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையினால், வேலை நேரத்தை குறைக்குமாறு அரசு அறிவுறுத்தியிருக்கிறது

மின்சாரத் தட்டுப்பாட்டால் சீனா நிலைகுலைந்து போயிருக்கிறது. சீனாவில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையினால், வேலை நேரத்தை குறைக்குமாறு அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அதோடு, கடும்குளிர் காலத்தில் வெப்பமூட்டும் இயந்திரங்களையும் அமைப்புகளையும் மூடவும்  அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

சீனாவின் பல மாகாணங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறை தொடர்ந்து 10 நாட்களாக நீடிக்கிறது. முதலாவதாக, ஜெஜியாங் (Zhejiang province)  மாகாணத்தில் உள்ள மின் உற்பத்தி தொழிற்சாலைகள் மூன்று நாட்களுக்கு ஒருமுறை 24 மணி நேரம் உற்பத்தியை நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன. அதோடு, ஷாப்பிங் மால்கள், சினிமா ஹால்கள், பார்கள் போன்றவை அவற்றின் வேலை நேரத்தைக் குறைக்கவும், வெப்ப அமைப்பை மூடவும் அறிவுறுத்தப்பட்டன.  

கார்பன் உமிழ்வின் அளவைக் குறைக்க நிலக்கரி வழங்கல் வேண்டுமென்றே குறைக்கப்பட்டுள்ளதாக சீனா (China) தெரிவித்துள்ளது. ஜெஜியாங் (Zhejiang) மற்றும் ஜியாங்சி (Jiangxi) என இரண்டு மாகாணங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. மின்சாரம் அதிகம் பயன்படுத்தும் நேரங்களில் மின் தடை ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வணிக நிறுவனங்களுக்கான மின்சார வழங்கலும் குறைக்கப்பட்டுள்ளதாக ஹுனான் மாகாணம் (Hunan province) தெரிவித்துள்ளது. நிலக்கரி வழங்கல் குறைக்கப்பட்டிருப்பதால் மின்சார நுகர்வு குறைக்கப்படுவதாகவும் ஹூபே மாகாண (Hubei province) அதிகாரிகள் தெரிவித்தனர்.

2060 க்குள் கார்பன் நடுநிலையாக்கும் முயற்சி, தனது லட்சிய திட்டம் என சீனா அறிவித்துள்ளது (அதாவது கார்பன் உமிழ்வை முற்றிலுமாக கட்டுப்படுத்துதல்). கார்பன் வாயுக்களின் மிகப்பெரிய உமிழ்வு நிலக்கரியிலிருந்து வருகிறது. மின்சாரம் (Electricity) தயாரிக்கவும், குளிர் காலத்தில் வீடுகளை சூடாக்கவும் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதுவரை, சீனாவின் பல மாகாணங்கள் இந்த பணிகளுக்கு நிலக்கரியையே நம்பியிருந்த நிலையில், தற்போது அவை தூய்மையான ஆற்றலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

சீனாவில் தொழிற்சாலைகளில் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதும், கொரோனா (Corona) தொற்றுநோய்க்குப் பிறகும் மின்சாரத்திற்கான தேவை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, பல மாகாணங்களில் மின்சாரம் பயன்படுத்துவது குறைக்கப்பட வேண்டியிருக்கிறது. ஹுனான், ஜியாங்சி போன்ற மாகாணங்கள் ஏற்கனவே மின் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொண்டன. குளிர்காலத்தின் முடிவில், மின்சார பற்றாக்குறை தீர்ந்துவிடும் கூறப்படுகிறது.

சீனாவில் மின்சாரத்தின் தேவை அதிகரித்ததால் நிலக்கரியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நிலக்கரியின் விலையானது, டன் ஒன்றுக்கு 600 யுவானில் இருந்து 730 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தவிர, சமீபத்தில் சீனாவின் பல நிலக்கரி சுரங்கங்களில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.

இதுவும் நிலக்கரி விநியோகத்தையும் பாதித்துள்ளன. ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றங்களினால், அங்கிருந்து நிலக்கரி வழங்கல் குறைக்கப்பட்டுள்ளது. சீனாவில் நிலக்கரி இறக்குமதி, நவம்பர் மாதத்தில் 19 சதவீதம் சரிவை கண்டது. இவை அனைத்தும் மின்சார உற்பத்தியை பாதித்துள்ளன.



 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக