சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் கேம்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று தான் கூறவேண்டும். ஆனாலும் சில ஆன்லைன் கேம்களுக்கு பெரிய எதிர்ப்புகள் இருந்தாலும், அதிக இடங்களில் இன்னும் பிரபலமாகி வருகின்றன இதுபோன்ற ஆன்லைன் கேம்கள்.
இந்நிலையில் இந்தியாவின் முன்னிண ஸ்போர்ட்ஸ் மற்றும் கேம் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான லோகோ (Loco), Activision Blizzard உடன் கூட்டு சேர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய கால் ஆஃப் டூட்டி மொபைல் போட்டியை அறிவித்துள்ளது.
குறிப்பாக இந்த போட்டி ரூ.35 லட்சம் வரையிலான பரிசுத்தொகையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது அறிவிக்கப்பட்ட இந்த போட்டி, நாடு முழுவதும் இருக்கும் கேமர்களுக்கு இந்திய கேமிங் சுற்றுச்சூழல் அமைப்பை பெருமளவில் மாற்றுவதற்கு வழி வகுக்கும்.
அதேபோல் இந்த போட்டிக்கு கால் ஆஃப் டூட்டி: மொபைல் இந்தியா கோப்பை என்று பெயரிடப்பட்டுள்ளது. பின்பு இது லோகோ வழியாக நேரடியாக ஒளிபரப்பப்டும். மேலும் இந்த நிகழ்வு 2 tournament-களாக நடக்கும் என்றும், அதில் ஒன்று கால் ஆஃப் டூட்டி: மொபைல் இந்தியா கோப்பை ஓபன் பெயரில் நடக்கும். மற்றொன்று கால் ஆஃப் டூட்டி: மொபைல் இந்தியா கோப்பை ப்ரோ என்ற பெயரில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கால் ஆஃப் டூட்டி மொபைல் இந்தியா கோப்பை ஓபன் போட்டிக்கான பதிவுகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. இது நாடு முழுவதும் உள்ள டீம்கள் 5v5 போட்டிகளை Open qualifier வடிவத்தில் ஒருவருக்கொருவர் போட்டியிட அனுமதிக்கிறது. பின்பு இந்த tournament-ன் மொத்த பரிசுத்தொகை ரூ.10 லட்சம் ஆகும். அதில் ரூ.5 லட்சம் முதல் இடம் பிடித்த டீமிற்கு வழங்கப்படும், மீதமுள்ளவை 2 மற்றும் 8 வது இடங்களுக்கு இடையிலான அணிகளுக்கு இடையே பிரித்துக் கொடுக்கப்படும்.
மேலும் Open qualifier-க்கு பிறகு, தகுதிபெற்ற 16 அணிகள் கால் ஆஃப் டூட்டி மொபைல் இந்தியா கோப்பை ப்ரோவுக்கு முன்னேறும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் சிறந்த தொழில்முறை கால் ஆஃப் டூட்டி: மொபைல் டீம்கள் 5v5 போட்டிகளை லீக் வடிவத்தில் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் Team Mayhem மற்றும் Team IND போன்ற சிறந்த டீம்கள் கால் ஆஃப் டூட்டி: மொபைல் இந்தியா கோப்பை ப்ரோ போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பின்பு கால் ஆஃப் டூட்டி மொபைல் இந்தியா கோப்பை ப்ரோவின் 5v5 போட்டிகளின் மொத்த பரிசுத்தொகை ரூ.25 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு இதில் முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10 லட்சம், தொடர்ந்து 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீதிமுள்ள பரிசுத்தொகை 4 மற்றும் 8 வது இடங்களுக்கு இடையிலான அணிகளிடையே பகிரப்படும்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக