பேக்கிங் செய்யாமல் சமையல் எண்ணெய் வகைகளைச் சில்லறையாக வியாபாரம் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உணவு பாதுகாப்புச்
சட்டத்தின்படி சமையலுக்குப் பயன்படும் எண்ணெய் வகைகளில் நடைபெறும் கலப்படத்தைத் தடுப்பதற்காக
இந்த அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமையல் எண்ணெய் வகைகளில் அதிகளவில் கலப்படம் நடக்கிறது எனக் கூறி, அதைத் தடுக்க வேண்டும்
என்றும் தரமான சமையல் எண்ணெய் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பொது நல மனு ஒன்று
சென்னை உயர் நீதிமன்றம் கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக வந்தது.
அப்போது நீதிபதிகள் சமையல் எண்ணெய் விற்பனை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர்.
அதாவது, “பாக்கிங் செய்யப்படாமல் சமையல் எண்ணெய் வகைகள் எப்படி விற்கப்படுகின்றன?”,
“எண்ணெய் தொடர்பான தரத்தை ஆய்வு செய்ய எத்தனை ஆய்வுக் கூடங்கள் உள்ளன?” எனக் கேள்வி
எழுப்பினர்.
இந்த கேள்விகள் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள்
உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவைத் தொடர்ந்து மனு மீதான விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு
ஒத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து மளிகைக் கடைகளில் சில்லறையாகச் சமையல் எண்ணெய் சட்டப்படி குற்றமாக மாறியுள்ளது.
இந்த தடை உத்தரவு நிச்சயம் ஜனவரியாவது தொடரும் என்பதில் சந்தேகமில்லை. இந்த திடீர்
தடை உத்தரவு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக