ஒப்போ நிறுவனம் ஒப்போ A53 ஸ்மார்ட்போன் மாடலில் புதிய 5 ஜி வேரியண்ட் மாடலை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனை ஒப்போ A53 5ஜி என்ற பெயரில் ஒப்போ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ ஏ 53 இன் 5 ஜி பதிப்பாகும், இது இந்த ஆண்டு சில மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஒப்போ A53 5 ஜி ஸ்மார்ட்போன்
புதிய ஒப்போ A53 5 ஜி ஸ்மார்ட்போன் சீன சந்தையில் 1,299 யுவான் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தோராயமாக இந்திய மதிப்பின்படி ரூ .14,600 ஆகும். இந்த புதிய ஒப்போ A53 5 ஜி ஸ்மார்ட்போன் உள்ளது. புதிய ஒப்போ A53 5 ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி விருப்பத்திலும், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடலில் வருகிறது. இந்த போன் பர்ப்பில், லேக் கிரீன் மற்றும் பிளாக் கலர் விருப்பங்களில் வருகிறது.
ஒப்போ A53 5 ஜி
புதிய ஒப்போ A53 5 ஜி ஸ்மார்ட்போனில் 6.5' இன்ச் டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், மீடியாடெக் டைமன்சிட்டி 720 சிப்செட், கைரேகை சென்சார், AI டிரிபிள் ரியர் கேமரா மற்றும் இன்னும் பல அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய போனின் சிறப்பம்ச விபரங்களை இப்பொழுது பார்க்கலாம்.
OPPO A53 5G விவரக்குறிப்புகள்
- 6.5' இன்ச் 2400 x 1080 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்பிளே
- 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட்
- 2.0GHz கிளாக் வேகத்துடன் மீடியா டெக் டைமன்சிட்டி 720 சிப்செட்
- SA / NSA டூயல் மோடு 5 ஜி நெட்வொர்க்
- ஆண்ட்ராய்டு 10 இல் கலர்ஓஎஸ் 7.2
- 4 ஜிபி அல்லது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரைஸ்டோரேஜ்
- 16 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
- 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- 10W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 4040 எம்ஏஎச் பேட்டரி
- 4 ஜி எல்டிஇ
- வைஃபை 802.11 ஏசி
- புளூடூத் 5
- ஜிபிஎஸ் / க்ளோனாஸ்
- யூ.எஸ்.பி டைப்-சி
- 3.5 ஆடியோ ஜாக்
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக