Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 18 டிசம்பர், 2020

கோக கோலாவின் அதிரடி திட்டம்.. பதற்றத்தில் ஊழியர்கள்..!

என்னென்ன பொருட்கள் நிறுத்தம்

அமெரிக்காவின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமான கோக கோலா நிறுவனம், அதன் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 17 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான செய்தி தொகுப்பில், உலகம் முழுவதிலுமான அதன் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 17 சதவீதம் பேரை, அதாவது 2,200 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது இந்த நிறுவனம் அதன் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதி எனவும் தெரிவித்துள்ளது.

மொத்தம் எத்தனை ஊழியர்கள்

அட்லாண்டாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், இதன் பணி நீக்கங்களில் பாதி அமெரிக்காவில் இருக்கும் என்றும் கூறியுள்ளது. கோக கோலாவில் மொத்தம் 86,200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் 10,400 பேர் பணியாற்றுகின்றனர். கோக கோலா கொரோனாவின் காரணமாக அதன் விற்பனை சரிந்துள்ள நிலையில் இப்படியொரு முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

வருவாய் சரிவு

இது குறித்து கோக கோலா தரப்பில், கொரோனாவினை கட்டுபடுத்தும் விதமாக, உலக நாடுகள் பலவும் தளர்வில்லா முழு லாக்டவுனை பல மாதங்களாக அமல்படுத்தின. இதன் காரணமாக பல நாடுகளில் தியேட்டர்கள், அரங்கங்கள் உள்ளிட்ட பலவும் மூடப்பட்டன. இதன் காரணமாக அதன் விற்பனை பெரியளவில் முடங்கியது. கடந்த செப்டம்பர் காலாண்டில் கூட அதன் வருவாய் 9 சதவீதம் குறைந்து, 8.7 பில்லியன் டாலராக குறைந்தது.

பிராண்டுகளும் குறைப்பு

ஆக இந்த சரிவு ஏற்கனவே பின்னோக்கி சென்று கொண்டிருந்த நிறுவனத்தினை, மறுசீரமைப்புக்கு தள்ளியது. இதன் காரணமாக நிறுவனம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. மேலும் தற்போது பணி நீக்கம் மட்டும் அல்ல, கோக கோலா, அதன் பிராண்டுகளின் எண்ணிக்கையும், பாதியாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

என்னென்ன பொருட்கள் நிறுத்தம்

குறிப்பாக டேப் (Tab), ஜிகோ தேங்காய் நீர் (Zico coconut water), டயட் கோக் (Diet Coke Fiesty Cherry), ஓட்வாலா ஜீஸ்( Odwalla juices) உள்ளிட்ட குறைவாக விற்பனையாகி வரும் பிராண்டுகளை தனது லிஸ்டில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு மினிட் மொய்ட் உள்ளிட்ட வளர்ந்து வரும் புதிய தயாரிப்புகளை வளர்ச்சி பெற வைக்க இந்த சேமிப்பை பயன்படுத்துவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

வணிகப் பிரிவையும் குறைக்க திட்டம்

அதோடு கோக கோலா தனது வணிக பிரிவுகளையும் 17-லிருந்து 9 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளது. இப்படி கொரோனாவினால் பெரும் பின்னடைவை சந்தித்த நிறுவனங்கள் பலவும் பணி நீக்கம் சம்பள குறைப்பை செய்து வந்த நிலையில், தற்போது அந்த பட்டியலில் கோக கோலாவும் சேர்ந்துள்ளது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக