
தொழில்நுட்பம் வளர்ச்சி மனித குலத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது என்றால் அது மிகையல்ல. அதில் ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று. பேரிடர் காலத்தில் தொடங்கி ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் தொழில்நுட்பம் பிரதானமாக இருக்கிறது.
அரசு எடுக்கும் பல நடவடிக்கைகள்
கொரோனா பரவல் உலக நாடுகளையே ஒரு உலுக்கு உலுக்கியது என கூறலாம். கொரோனாவை தடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்தது. இதில் தொழில்நுட்ப ரீதியல் செயலிகள் அறிமுகம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகித்தது.
டிவி ஆபரேட் செய்யப்படும் ரிமோட்
தொழில்நுட்பங்களின் தேவைகள் அதிகரித்தது என்பதைவிட தொழில்நுட்பங்கள் நம்மை ஆக்கிரமித்து வருகிறது என்றே கூறலாம். பொதுவாக நம் வீட்டை எடுத்துக் கொண்டால் டிவியை தொலைவில் இருந்து ஆபரேட் செய்யப்படும் ரிமோட் கண்ட்ரோலர், ஆட்டோமேட்டிக் லைட் என வரிசையாக பட்டியலிடலாம்.
ஸ்மார்ட்ஹோமாக மாற்றிய இளைஞர்
அதன்படி நாமக்கல்லில் இளைஞர் ஒருவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது வீட்டை ஸ்மார்ட்ஹோமாக மாற்றியுள்ளார். நாமக்கல்லை சேர்ந்தவர் நவீன். இவர் பள்ளி படிக்கும் காலத்திலேயே ஜேம்ஸ்பாண்ட் படத்தால் பெரிதளவு ஈர்க்கப்பட்டுள்ளார்.
பள்ளி படிப்பின்போதே கணினி பழுது நீக்கும் தொழில்
இதன்காரணமாக பள்ளி படிப்பின்போதே கணினி பழுது நீக்கும் தொழிலை கற்றுக் கொண்டுள்ளார். கல்லூரி படிப்பை முடித்ததும் அவருக்கு 14 நிறுவனங்களில் பணி ஆணைகள் வந்துள்ளன. ஆனால் அவர் அதை மறுத்துவிட்டு தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம்காட்டி தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளராக ஆக வேண்டும் என முயற்சியை தொடங்கியுள்ளது.
தாமாகவே இயங்கும் மின்விசிறி
இந்த நிலையில் நவீன் தற்போது பல தொழில்நுட்ப இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு முன்மாதிரியாகவே திகழ்ந்து வருகிறார் என்றால் அது மிகையல்ல. நவீன் வீட்டுக்குள் நுழைந்தவுடன் மின்விசிறி தாமாகவே இயங்கத் தொடங்குகிறது.
லித்தியம் பேட்டரி மூலம் மின் சுவர்
இந்த நிலையில் நவீன் தற்போது பல தொழில்நுட்ப இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு முன்மாதிரியாகவே திகழ்ந்து வருகிறார் என்றால் அது மிகையல்ல. நவீன் வீட்டுக்குள் நுழைந்தவுடன் மின்விசிறி தாமாகவே இயங்கத் தொடங்குகிறது.
வீட்டை ஸ்மார்ட்ஹோமாக மாற்றிய நவீன்
அவரது வீட்டுக்குள் இருக்கும் மின் விசிறி, கம்ப்யூட்டர் உள்ளிட்டவை தானியங்கி தொழில்நுட்பமாக மாற்றியுள்ளார். இணையதளத்தை பயன்படுத்தி தனது வீட்டை ஸ்மார்ட்ஹோமாக மாற்றியுள்ளார். பொறியியல் பட்டதாரியாக இருக்கும் இவர், லித்தியம் பேட்டரி மூலம் மின் சுவர் அமைக்கும் முயற்சியை தற்போது மேற்கொண்டு வருகிறார்.
முயற்சி வெற்றிப்பெற்றுள்ளது
கடந்த ஒன்பது ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு தற்போது தனது முயற்சி வெற்றிப்பெற்றுள்ளதாக நவீன் கூறியுள்ளார். அடுத்தடுத்த ஏணைய புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை இளம் கண்டுபிடிப்பாளர்கள் அறிமுகப்படுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக