பொருத்தமற்ற மற்றும் சட்டவிரோத வீடியோக்கள் வெளியிடுவதை பத்திரிகை ஒன்று வெளிப்படுத்தியிருந்தது. அதை அடுத்து, விசா மற்றும் மாஸ்டர்கார்டு போர்ன்ஹப் (Pornhub) வலைத்தளத்துடனான உறவுகளை முறித்துக் கொண்டன.
பாலியல் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறார்கள் இடம் பெற்றிருந்த மில்லியன் கணக்கான வீடியோக்களை போர்ன்ஹப் (Pornhub) அகற்றியுள்ளது. பொருத்தமற்ற மற்றும் சட்டவிரோத வீடியோக்கள் வெளியிடுவதை பத்திரிகை ஒன்று வெளிப்படுத்தியிருந்தது. அதை அடுத்து, விசா மற்றும் மாஸ்டர்கார்டு போர்ன்ஹப் (Pornhub) வலைத்தளத்துடனான உறவுகளை முறித்துக் கொண்டன. அதையடுத்து இந்த நடவடிக்கைகளை போர்ன்ஹப் வலைதளம் மேற்கொண்டுள்ளது.
இனிமேல், சரிபார்க்கப்படாத பயனர்கள் இணையதளத்தில் உள்ளடக்கத்தை வெளியிடுவதை போர்ன்ஹப் (Pornhub) தடைசெய்கிறது. சட்டவிரோத வீடியோக்களை அகற்றுவதோடு மட்டுமல்லாமல், சரிபார்க்கப்படாத பயனர்களால் பதிவேற்றப்பட்ட வீடியோக்களை அகற்றும் பணியில் போர்ன்ஹப் ஈடுபட்டுள்ளது.
ஒரு வலைப்பதிவு (blog post) இடுகையில் இந்த நடவடிக்கையை அறிவித்த நிறுவனம், சரிபார்க்க முடியாத ஆதாரங்களில் இருந்து வெளிவரும் அனைத்து உள்ளடக்கங்களையும் நீக்குவதாகவு குறிப்பிட்டுள்ளது. ஆனால், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் (Twitter) போன்ற மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் கூட இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும் போர்ன்ஹப் சுட்டுக்காட்டியிருக்கிறது.
"தற்போது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையின பொருள் என்னவென்றால், போர்ன்ஹப் உள்ளடக்கத்தின் ஒவ்வொரு பகுதியும் சரிபார்க்கப்பட்ட பதிவேற்றியவர்களிடமிருந்து வந்தவை. இதுபோன்ற விஷயத்தை பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram), டிக்டாக் (TikTok), யூடியூப் (YouTube), ஸ்னாப்சாட் (Snapchat) மற்றும் ட்விட்டர் போன்ற தளங்கள் இன்னும் செய்யவில்லை" என்று போர்ன்ஹப் (Pornhub) நிறுவனம் தெரிவித்துள்ளது.
"போர்ன்ஹப்பில், சமூகத்தின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை" என்று நிறுவனம் மேலும் கூறியது.
வீடியோக்களை அகற்றும் செயல்முறை தொடங்கிய உடனேயே, இணையதளத்தில் (website) உள்ள வீடியோக்களின் எண்ணிக்கை 13 மில்லியனிலிருந்து வெறும் 4 மில்லியனாக குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இது மோசமான உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கான சரியான திசையில் முக்கியமான ஒரு படியாக இருந்தாலும், தொற்றுநோய் காலத்தில் தங்கள் வாழ்வாதரத்திற்காக போர்ன்ஹப் போன்ற தளங்களைப் பயன்படுத்தும் பாலியல் தொழிலாளர்கள் (sex workers) மீதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
2007 இல் போர்ன்ஹப் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே இது முதல் தடவையாகும்.போர்ன்ஹப்பில் ஒரு பயனரை சரிபார்ப்பது எப்படி? போர்ன்ஹப் பயனர்கள், தங்களது பயனர்பெயரைக் கொண்ட ஒரு துண்டு காகிதத்துடன் தங்களின் புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்க்கப்பட்டதும், பயனர்கள் தங்கள் வீடியோக்களைப் பணமாக்கிக் கொள்ள முடியும்.
அதாவது, தனது நிறுவனத்தின் கொள்கைகள் வேறு தளங்களுடன் ஒப்பிடப்படுவதால் அல்ல. மாறாக வயதுவந்தோரின் உள்ளடக்கத்தை பிரதானமாக வைத்திருப்பதால், தான் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்படுவதாக போர்ன்ஹப் கூறுகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக