Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 24 டிசம்பர், 2020

'டப்பா to டாப்-டக்கர்' ஆனா ஐபோன்.. உலகின் முதல் ஐபோன் பற்றி தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க..

ஒரே நாளில் எதுவும் மாறிவிடவில்லை

இந்த 2020 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சமீபத்திய 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை பட்டியலில் ஆப்பிள் ஐபோன் 12 சாதனம் முதல் இடத்தை பிடித்துள்ளது, அதனைத் தொடர்ந்து 2வது இடத்தை ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சாதனம் பிடித்துள்ளது. என்னதான் ஐபோன்களின் விலை அதிகமாக இருந்தாலும், அதில் இருக்கும் அம்சத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் உலகளவில் பலகோடி பயனர்கள் இந்த விலை உயர்ந்த போன்களை வாங்கத் தயாராக இருக்கின்றனர்.

13 ஆண்டுகளில் ஐபோனின் பரிணாம வளர்ச்சி எப்படி மாறியுள்ளது?

இப்பொழுது, வெளியாகியுள்ள ஐபோன் சாதனத்தில் அதிநவீன அம்சங்கள் பற்பல குவிந்திருந்தது, இந்த அம்சங்களை எல்லாம் பார்த்தே பயனர்கள் ஆப்பிள் ஐபோன்களை வாங்க முன்வருகின்றனர். கடந்த 13 ஆண்டுகளில் ஐபோனின் பரிணாம வளர்ச்சி என்பது எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு அபரிமிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இதை நாம் புரிந்துகொள்ள, ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் பற்றி சற்று பின்னோக்கி சென்று பார்க்க வேண்டும்.

உலகின் முதல் ஐபோன் சாதனம் எப்போது வெளியானது தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டீவ் ஜாப்ஸ் ஜனவரி 9, 2007 அன்று உலகின் முதல் ஐபோன் சாதனத்தை அறிமுகம் செய்து வெளியிட்டார். முதல் ஐபோன் 4ஜிபி ரேம் ஸ்டோரேஜ் உடன் 499 டாலர் என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் ஸ்டோரேஜ் மாடல் 599 டாலர் என்ற விலையிலும் ஜூன் 29, 2007ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. முதல் ஐபோனில் இருந்த அம்சங்களை எல்லாம் நீங்கள் தெரிந்துகொண்டால் ஆடிப்போய்விடுவீர்கள்.

அன்று டாப் - டக்கர்.. இன்று டப்பா..

ஆம், அன்றைய காலகட்டத்தில் ஐபோன் சாதனத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அம்சங்களைப் பார்த்து உலகமே வியந்து போனது. ஆனால், அந்த அம்சங்களுடன் இன்றைய ஐபோனின் அம்சங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் அவை எல்லாம் உங்களுக்கு ஒன்றுமில்லை என்று தான் தோன்றும். ஏனெனில், இன்று இருக்கும் அம்சங்களில் பல அம்சங்கள் அன்றைய ஐபோனில் இல்லை என்பதே உண்மை.

முதல் ஐபோனின் சைஸ் எவ்வளவு தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் என்ன அளவில் வெளியிடப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? உண்மை தெரிந்தால் நீங்களே நம்ப மாட்டீர்கள். ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த முதல் ஐபோன் வெறும் 3.5' இன்ச் 320 x 480 பிக்சல் கொண்ட 163 ppi டையகோனல் டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் ஐபோனில் வழங்கப்பட்ட கேமரா வெறும் 2 மெகா பிக்சல் மட்டும் தான் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

ஸ்மார்ட்போன் புரட்சியை மாற்றி அமைத்த ஐபோன்

ஐபோன் வெளிவருவதற்கு முன்பு, ஸ்மார்ட்போன் சாதனங்கள் பாதி திரை மற்றும் மீதி கீ-போர்டாக இருந்தது, முதல் முதலில் டச் ஸ்கிரீன் அம்சத்துடன் வெளியாகிய மொபைல் போன் மாடல் ஐபோன் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய காலகட்டத்தில் வலைத்தளங்கள் முழுமையாக ஸ்மார்ட்போன்களில் ஓபன் ஆகாது, இதற்காக நிறுவனங்கள் தளங்களின் பலவீனமான மொபைல் வெர்ஷனை உருவாக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

ஒரே நாளில் எதுவும் மாறிவிடவில்லை

ஆனால், ஆப்பிள் ஐபோன் இதை முறியடித்து அனைத்து நிலைமையையும் அன்று மாற்றி அமைக்க துவங்கியது. இன்று நீங்கள் பயன்படுத்தும் ஐபோன் சாதனங்களில் இருக்கும் அம்சங்கள் ஒவ்வொன்றும் உருவாக பல ஆண்டுகள் தேவைப்பட்டது என்பதே உண்மை. ஒரே நாளில் எதுவும் மாறிவிடவில்லை, தொழில்நுட்பம் எப்போதும் வளர்ச்சி அடைந்துகொண்டே தான் இருக்கும், இதற்கு முடிவு என்பது இருக்காது.

வால்பேப்பர் கூட மாற்றம் செய்ய முடியாது

முதல் ஐபோன் 2ஜி சேவையில் மட்டுமே இயங்கக் கூடியதாக இருந்தது, அப்படியானால் இணைய வேகத்தை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். ஆப் ஸ்டோர் என்பது அந்த நேரத்தில் இல்லை. முதல் ஐபோனின் பேக்கிரௌண்ட் கருப்பு நிறத்தில் மட்டுமே இருந்தது, அதற்குப் பின்னால் இருந்த காரணம், உங்களால் முதல் ஐபோனில் வால்பேப்பர் கூட மாற்றம் செய்ய முடியாது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் அதுதான் உண்மை.

வீடியோ ரெகார்டிங் கிடையாது.. மேப்ஸ் கிடையாது.. நோட்டிபிகேஷன் சென்டர் கிடையாது..

மெசேஜ்ஜில் உங்களால் போட்டோ அனுப்ப முடியாது.. மேப்ஸ் கிடையாது.. நோட்டிபிகேஷன் சென்டர் கிடையாது, சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடையாது.. கண்ட்ரோல் சென்டர் கிடையாது..கேமரா இருந்தது ஆனால் வீடியோ எடுக்க முடியாது.. இப்படிப் பல அம்சங்கள் இல்லாமல் வெளியான முதல் ஐபோன் சாதனத்துடன் இன்றைய ஐபோனை ஒப்பிட்டுப் பார்த்தால் தொழில்நுட்பம் எத்தனை வேகமாக முன்னேறியுள்ளது என்பது நமக்குத் தெரிகிறது. 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

, ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக