Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 24 டிசம்பர், 2020

வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி?

வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி?

இந்தியாவில் உயர் ரக கார்கள் ரோட்டில் சென்றாலே நாம் திரும்பி பார்க்கும் வகையில் அதன் பெர்பாமென்ஸ் மற்றும் டிசைன் இருக்கும். உலகளவில் அதிகமான சூப்பர் கார்கள் மட்டும் சூப்பர் பைக்குகள் இருந்தாலும் இந்தியாவில் அந்த வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஃபெராரி, டுகாட்டி, லாம்போர்கினி, எம்வி அகஸ்டா, பென்ட்லி, ரோல்ஸ் ராய்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்தியாவிலும் நேரடியாவோ அல்லது மற்ற நிறுவனங்களுடன் இணைப்பாவோ அவர்களது வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

உதாரணமாக இந்திய நிறுவனமான டிஎஸ்கே நிறுவனம் இத்தாலியின் பென்னலி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து டிஎஸ்கே - பென்னலி என்ற பெயரில் சூப்பர் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இப்படி சில நிறுவனங்கள் வேறு நிறுவனங்களுடன் இணைந்தோ அல்லது தனிப்பட்ட முறையிலோ இந்தியாவில் தங்கள் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

சர்வதேச ஆட்டோமொபைல் தயாரிப்பார்கள் இந்தியாவை ஒரு வாகன விற்பனைக்கு அதிக சாத்தியம் உள்ள மார்கெட்டாக பார்க்கின்றனர். அதே நேரத்தில் நிரந்தரமான மார்கெட்டாக இந்தியாவை கருத அவர்கள் தயங்கி வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் சர்வதேச ஆட்டோமொபைல்களின் வாகனங்கள் இந்தியாவில் குறைவான விற்பனையை பெறுவது தான். உதாரணத்திற்கு மெர்ஸிடிஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த மார்கெட்டில் இந்திய மார்க்கெட் வெறும் 0.6 சதவீதம் தான். இதை அந்நிறுவனமே அறிவித்திருந்தது.

குறைந்த அளவிலான விற்பனை காரணமாவே புகழ்பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே பிராண்டை இந்திய விற்பனையில் இருந்து அந்நிறுவனம் நீக்கியது.இந்தியாவில் எதிர்பார்த்த அளவிற்கு அந்நிறுவனத்தால் விற்பனையை கொண்டு வரமுடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் இந்தியாவிற்கு ஏற்ப கார்களை அந்நிறுவனம் தயாரிக்காததும். இந்தியாவிற்காக தயாரித்தாலும் இதை இந்தியாவிற்கு கொண்டுவருவதில் இருக்கும் சிக்கலும் தான் முக்கிய காரணம்.

இந்திய அரசு அட்டொமொபைல் நிறுவனங்களிடம் இந்தியாவில் அதன் உற்பத்தியை செய்து இந்தியாவில் விற்பனை செய்வதையே ஊக்கு விக்கிறது. தனித்தனி பாகங்களாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் அதை அசெம்பிள் செய்வதையோ, அல்லது ஒட்டு மொத்த வாகனத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்பனை செய்வதையோ இந்தியா பெரிய அளவில் ஊக்குவிக்கவில்லை.

உள்நாட்டு தயாரிப்பு வாகனங்களை ஊக்கு க்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்திய அரசு வரி விதிக்கிறது. இந்தியாவில் இவ்வாறான வாகனங்களை வாங்குபவர்கள் பெரும்பாலும் பெரும் கோடீஸ்வரர்களாவே இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் அந்த வாகனத்தை வாங்க அளிக்கும் இறக்மதி வரி, அது அந்த வாகனத்தின் விலையை இருந்து இரண்டு மூன்று மடங்கு அதிகப்படுத்து விடும்.

இந்தியாவில் அவ்வாறு வெளிநாட்டு வாகனங்களை இறக்குமதி செய்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு, இவ்வாறு பல வெளிநாட்டு கார்களை வாங்குபவர்கள் பெரும்பாலும் அதை அவர்களின் கவுரவத்திற்காகவே அதிகம் வாங்கி தங்கள் கராஜை அழகு படுத்தி கொள்கின்றனர்.

இவ்வாறான வெளிநாட்டில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதை விட அதற்கு நிகரான இந்தியாவிலேயே கிடைக்கும் வாகனங்களை தேர்ந்தேடுக்கலாம். வெளிநாட்டு வாகனங்களுக்கு இறக்குமதி வரி மட்டும் இல்லாமல் அந்த வாகனம் பழுதானாலோ, அதில் உங்கள் பாகங்களை மாற்ற வேண்டும் என்றாலோ அதை இந்தியாவில் செய்வது கடினம்.

அது மட்டும் அல்ல பல வெளிநாட்டு கார்களும் பைக்குகளும், நம் நாட்டில் பெரும்பான்மையாக விற்பனையாகும் பெட்ரோலுக்கு ஏற்றது அல்ல அந்த வாகனங்களுக்கு 98 ஆக்டேன் பெட்ரோல்களை பயன்படுத்த வேண்டும்.

அந்த ரக பெட்ரோல்கள் இந்தியாவில் அதிகம் கிடைப்பதில்லை, நாட்டின் தலைநகர் டில்லியிலேயே 3-4 பெட்ரோல் பங்குகள் மட்டுமே கிடைக்கிறது. இந்த பெட்ரோல் கிடைக்காத ஊர்களில் நீங்கள் நம் நாட்டில் விற்கப்படும் 93 ஆக்டேன் பெட்ரோலை தான் பயன்படுத்த வேண்டியது வரும். ஆனால் இந்த பெட்ரோலை அந்த வெளிநாட்டு வாகனங்கள் ஏற்றுக்கொள்ளாது இதனால் பெர்பாமென்ஸ் பெரும் அளவிற்கு குறையலாம் மேலும் வாகனங்களும் விரைவில் பழுதாகலாம்

தற்போது வெளிநாடுகளில் மட்டும் கிடைக்கும் வாகனங்களை இந்தியாவில் இருந்து கொண்டு எப்படி வாங்குவது எந்தெந்த வாகனங்களை வாங்கலாம், என்பதை பார்ப்போம் வாருங்கள்

மத்திய வர்த்தக மற்றும் வெளியுறவு தொழிற்துறை வர்த்தக அமைச்சகம் சார்பில் கடந்த 1992ம் ஆண்டு DGFT, ITC (HS)கீழ் 87 பிரிவின் கீழ் கார் பைக் போன்ற வாகனங்களை வெளிநாட்டில் இருந்து வாங்குவது குறித்த சட்டம் கொண்டு கொண்டு வரப்பட்டது.

அதன் படி வெளிநாட்டில் இருந்து வாங்கும் வாகனங்கள் கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.

1. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களாக இருக்க கூடாது.

2. இந்தியாவிற்கு அந்த வாகனம் வரும்போது அந்த வாகனத்தின் பேரில் கடன், லீஸ், போன்ற சிக்கல்கள் இருக்ககூடாது.

3. அந்த வாகனம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு எந்த நாட்டிலும் பதிவாகிருக்ககூடாது.

4. வாகனத்தில் உள்ள ஸ்பீடோமீட்டர் இந்தியா ரீடிங்கில் இருக்க வேண்டும் (அதாவது km/h ஆக இருக்க வேண்டும் MP/h ஆக இருக்ககூடாது)

5. இந்திய கார்களில் இருப்பது போல் வலது புற டிரைவிங்கில் இருக்க வேண்டும் இடதுபுற டிரைவிங்காக இருக்ககூடாது.

6. அந்த வாகனத்தின் ஹெட்லைட்கள் இந்திய சாலை விதியின் படி இடதுபுற பயணத்திற்கு ஏற்ற வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

7. அந்த வாகனம் தயாரிப்பாளிடம் இருந்து தயாரிக்கப்பட்ட நாட்டில் இருந்து நேரடியாக ஏற்றமதியிருக்க வேண்டும், ஒரு வேளை தயாரிப்பாளர் அந்த வாகனத்தின் குடோனை வேறு நாட்டில் பராமரித்து வந்தால் அந்த நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்ய அந்த வாகன தயாரிப்பு நிறுவனம் அதற்கான போதிய ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும்.

8. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வாகனம் இந்திய மோட்டார் வாகன சட்டம் 1988ன் விதிகளுக்கு உட்பட்டு அமைந்திருக்க வேண்டும்.

ஒரு வேலை இறக்குமதியாளரோ/ டீலரோ இறக்குமதி செய்தால் அதற்காக சில விதிமுறைகள் உள்ளது.

1. இறக்குமதி செய்யப்படும் போது மோட்டார் வாகன சட்ட விதி 126ன் படி அந்த வாகனம் அங்கீகரிக்கப்பட்ட டெஸ்ட்டிங் மையத்தில் டெஸ்ட் செய்து அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

2. இறக்குமதி செய்யும் விதியில் தயாரிப்பாளர் தரப்பில் செய்ய வேண்டியவைகளுக்கு இறக்குமதியாளர்களே பொறுப்பு.



3. இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் சென்னை, கோல்கட்டா, மும்பை, கொச்சி துறைமுகம் அல்லது ஐசிடி துக்கலஹாபாத், டில்லி விமான நிலையம் ஆகிய பகுதி வழியாக மட்டுமே இறக்குமதி செய்யப்பட வேண்டும்.

ஆனால் இந்த சட்டங்கள் சில குறிப்பட்ட பயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்களுக்கு விதிவிலைக்கு அளிக்கப்பட்டுள்ளது அந்த பட்டியலை கீழே காணுங்கள்.

1. ராணுவ பயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்கள்.

2. ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்கள்.

3. குறைந்தது 2 ஆண்டுகள் வெளிநாட்டில் தங்கி அதில் 1 ஆண்டாவது இறக்குமதி செய்யப்படும் காரை பயன்படுத்தி வந்து மீண்டும் இந்தியாவிற்கு வந்து செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்தியர் என்றால் இந்த வீதிமுறைகளை தளர்த்தி அந்த வாகனத்தை இந்தியாவிற்கு கொண்டுவரலாம்.

4. இந்தியாவை சேர்ந்தவர் வெளிநாட்டில் உள்ள ஏதோ போட்டியில் பங்கேற்று காரை பரிசாக பெற்றால் அதை இந்தியாவிற்கு கொண்டு இந்த விதிமுறைகளை தளர்த்தி, கொண்டு வரலாம்.

5. வெளிநாட்டில் தங்கிருந்த உடல் ஊனமுற்றவர் அவர் பிரத்தியேகமாக பயன்படுத்தி வந்த வாகனங்களை இந்தியாவிற்கு விதிமுறைகளை தளர்த்தி கொண்டு வரலாம்.

6. மத ரீதியிலான அமைப்பு/ சேவை நிறுவனங்கள் என இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தங்களுக்கு நன்கொடையாக வரும் வாகனங்களை இந்த சட்ட விதிமுறை இல்லாமல் பெற்று கொள்ளலாம்.

7. வெளிநாட்டு தூதரகங்களின் பயன்பாட்டிற்காக இந்திய அரசின் அனுமதியுடன் வாகனங்களை அவர்கள் இந்தியாவில் இறக்குமதி செய்து கொள்ளலாம்.

8. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு செய்திக்காக வரும் செய்திநிறுவனங்கள் இந்திய அரசின் அனுமதியுடன் வெளிநாட்டு வாகனங்களை இந்தியாவில் இறக்குமதி செய்து கொள்ளலாம்.

9. வெளிநாட்டில் கிளைகள் வைத்துள்ள இந்திய கம்பெனிகள் வாகனங்களை இந்த விதிமுறைகள் இன்றி இறக்குமதி செய்து கொள்ளலாம்.

 

மேலே குறிப்பிட்ட விதிதளர்வில் முதல் 8 தளர்வுகளுக்கு ஒருவருக்கு 1 வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். 9வது தளர்விற்கு மட்டும் ஒருவருக்கு 3 வாகனங்கள் அனுமதிக்கப்படும்.


அதில் தளர்வு எண் 9ன் கீழ் இந்தியாவிற்கு வரும் வாகனங்கள் ஆர்.டி.ஓ மற்றும் டிஜிஎப்டியில் உள்ள தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்கு விற்பனை செய்ய தடை உள்ளது.

 

இதே போல வெளிநாட்டு தூதரகங்கள் அவர்கள் பயன்படுத்த வெளிநாட்டு கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்தால் அந்த காருக்கான கஸ்டமஸ் வரி செலுத்த வேண்டியதில்லை. இந்த காரை அவர்கள் இந்தியர்களிடம் விற்பனை செய்ய முடியாது. வெளிநாட்டவர்களிடமே விற்பனை செய்யலாம் அதற்கும் சில கஸ்டம்ஸ் விதிகள் உள்ளன.

மேலும் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் சில வகை வாகனங்களுக்கு இந்தியாவில் தகுதி சான்றிதழ் பெற தேவையில்லை, அவ்வாறு தகுதி சான்றிதழ் பெறாமல் இந்தியாவில் அந்த வாகனத்தை பயன்படுத்த 3000 சிசிக்கும் அதிகமான திறன் இன்ஜினை கொண்ட பெட்ரோல் காராகவோ, 2500 சிசி க்கும் அதிகமான திறன் இன்ஜினை கொண்ட டீசல் காராவோ இருக்க வேண்டும்.

பைக்கை பொருத்தவரை 800 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்டுள்ள பைக்கையும் தகுதி சான்று இல்லாமல் பயன்படுத்தலாம். அது மட்டுமல்ல CIF என சொல்லக்கூடிய வாகனத்தின் விலை, அதற்கான இன்சூரன்ஸ், அதை எடுத்து வர ஆகும் செலவு என அனைத்தும் சேர்த்து 40 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு அதிகமாக விலையிருந்தால் அந்த வாகனத்திற்கு தகுதி சான்று பெற தேவையில்லை.

ஆனால் மேலே குறிப்பிட்ட வாகனங்கள் இந்தியாவில் தகுதி சான்றிதழ் பெற்றிருக்காவிட்டாலும், ECE, NCAP போன்ற ஐரோப்பா ஸ்டாண்டர்டு சான்று வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் தகுதி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.


இறக்குமதி வரி எவ்வளவு?

இந்தியாவை பொருத்தவரை வாகனத்தின் வகைகளையும் அதன் இன்ஜின் திறன்களையும் பாெருத்து வரி விதிப்புகள் மாற்றம் பெருகிறது இந்தியாவில் டூவீலர், 3 வீலர், 4 வீலர், சிறப்பு வாகனங்களாக தொலைகாட்சி லைவ் வேன், டிராக்டர்கள், க்ரேன்கள் உள்ளிட்டவைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

கார்களை பொருத்தவரை இந்த காருக்கான CIF எனப்படும் காருக்கான விலை, இன்சூரன்ஸ், கொண்டு வருவதற்கான செலவு இந்த மொத்த தொகையில் 165% இறக்குமதி வரியாக செலுத்த வேண்டும் பைக்குகளுக்கு அதன் CIF ல் இருந்து 116 சதவீதம் இறக்குமதி வரியாக செலுத்த வேண்டும்.

 

அதாவது ஒரு வெளிநாட்டு காரின் CIF ரூ 10 லட்சம் என்றால் இதை இறக்குமதி செய்வதற்கான வரி மட்டும் ரூ 16.5 லட்சம் ஆகும் ஆக மொத்தம் ரூ10 காரை இந்தியாவிற்கு கொண்டு வர ரூ 26.5 லட்சம் செலவு செய்ய வேண்டும். இது போக அந்த வாகனத்தை பதிவு செய்ய அந்தந்த மாநிலத்தில் விதிக்கப்படும் வரிகளையும் செலுத்த வேண்டும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 


இந்த இறக்குமதி வரி கேட்ட உடனேயே பலர் வாகனத்தை இறக்குமதி செய்யும் எண்ணத்தை கைவிட்டுவிடுவர். இந்தியாவில் சட்டங்கள் வாகனங்களை இறக்குமதி செய்ய ஏற்றதாக இல்லை. அதனால் வெளிநாட்டு வாகனங்களை இறக்குமதி செய்ய நினைப்பவர்கள் அந்த வாகனத்திற்கு ஏற்ற மற்ற ஏதேனும் வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகிறதா அதை நீங்கள் வாங்கலாமா என யோசித்துக்கொள்ளுங்கள்.


இது வெறும் அதிக பணம் செலவு செய்வதற்காக மட்டும் அல்ல அந்த காரை நீங்கள் இந்தியாவில் பராமரிப்பதிலும், அதற்கான சரியான எரிபொருளை நிரம்புவதிலும், பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக