ரியல்மி தனது புதிய TWS இயர்பட்ஸ் ஆன ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ரியல்மி பட்ஸ்
ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷன் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (டி.டபிள்யூ.எஸ்) இயர்பட்ஸ் இந்தியாவில்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் புதிய ரியல்மி வாட்ச் எஸ் மற்றும் ரியல்மி
வாட்ச் எஸ் ப்ரோவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய ரியல்மி இயர்பட்ஸை பிரபல கலைஞர் ஜோஸ் லெவி வடிவமைத்துள்ளார் மற்றும் இது
மென்மையான பளபளப்பான கண்ணாடி பூச்சு வடிவமைப்பை பெற்றுள்ளது. ஏற்கெனவே கருப்பு மற்றும்
வெள்ளை நிறத்தில் வாங்க கிடைக்கும் ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோவுடன் இந்த புதிய ஏஇயர்பட்ஸ்
இணைகிறது.
புதிய கண்ணாடி பூச்சு தவிர, ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷனின் அம்சங்கள் மற்றும்
விவரக்குறிப்புகளானது கடந்த அக்டோபரில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோவுக்கு ஒத்தவை.
புதிய இயர்பட்ஸ் active noise cancellation, 94 millisecond super low latency மற்றும்
அழைப்புகளுக்கான dual-mic noise cancellation போன்ற அம்சங்களுடன் வருகின்றன.
இந்தியாவில் ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர்
எடிசனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷன் இந்தியாவில் ரூ.4,999 க்கு வாங்க கிடைக்கும்.
இந்த புதிய இயர்பட்ஸின் முதல் விற்பனை வருகிற ஜனவரி 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு
(நண்பகல்) நடைபெறும். இது பிளிப்கார்ட், ரியல்மி.காம் மற்றும் கூட்டாளர் ஆஃப்லைன் கடைகள்
வழியாக வாங்க கிடைக்கும். ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷன் நிறுவனத்தின் தளத்தில்
‘New Wave Silver’ என்கிற வண்ண விருப்பமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷன் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:
- ப்ளூடூத் வி 5 ஆதரவு
- 10 மிமீ டைனமிக் டிரைவர்கள்
- 35dB வரை நாய்ஸ் ரிடெக்ஷன் வரை வழங்கும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்
- 94 எம்எஸ் லோ லேடென்சி மோட்
- 25 மணிநேர பேட்டரி ஆயுள்
- பெரிய 486 எம்ஏஎச் பேட்டரி
- இதன் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு 15 நிமிட சார்ஜிங்கில் ஏழு மணிநேர பிளேபேக்கை வழங்கும்
- புதிய இயர்பட்ஸ் ஐபிஎக்ஸ் 4 நீர் எதிர்ப்புடன் வருகின்றன
- இன்டெலிஜென்ட் நாய்ஸ் கேன்சலேஷன் செய்வதற்கான ரியல்மே எஸ் 1 சிப்
- கூர்மையான மற்றும் தெளிவான அழைப்புகளுக்கு டூயல் மைக் நாய்ஸ் கேன்சலேஷன்
- தனித்துவமான கோபல் வடிவம்
- இயர்பட்ஸ் ஒவ்வொன்றும் 5 கிராம் எடையைக் கொண்டுள்ளன
- smart wear detection, touch controls மற்றும் voice assistance போன்ற அம்சங்கள்.
- ஸ்மார்ட்போன்கள் உடனான இணைப்பிற்கு வழக்கம் போல ரியல்மி கனெக்ட் ஆப்.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக