வாட்ஸ்அப் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் பேஸ்புக் வழங்கும் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் சிறப்பாக ஒருங்கிணைய வாட்ஸ்அப் அதன் தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளை அப்டேட் செய்துள்ளது.
அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த ஆண்டு வாட்ஸ்அப் வெப் பிரிவில் நிறைய மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மேலும் இப்போது வீட்டில் இருந்து வேலை பார்க்கும் மக்களுக்கு இந்த வாட்ஸ்அப் வெப் சற்று அதிகமாக உதவுகிறது என்றே கூறலாம்.
அப்படி வாட்ஸ்அப் வெப் அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பயனுள்ள கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்-ஐ தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. இந்த ஷார்ட்கட்ஸ் ஆனது ஒரு சில வேலையை மிகவும் சுலபமாக்கி விடுகிறது. இப்போது தனித்துவமான வாட்ஸ்அப் வெப் கீபோர்ட் ஷார்ட்கட்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்.
1.Alt + Ctrl + n ஆனது
Alt + Ctrl + n ஆனது புதிய சாட்-ஐ ஆரம்பிக்க (New Chat) உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
2.Alt + Ctrl + p
Alt + Ctrl + p வசதியானது ப்ரொபைல் விவரங்களை காண (Profile And About) உதவுகிறது.
3.Alt + Ctrl + /
Alt + Ctrl + / ஷார்ட்கட்ஸ் ஆனது குறிப்பிட்ட தேடலை நிகழ்த்த (Search) பயன்படுகிறது.
4.Alt + Ctrl + e
Alt + Ctrl + e வசதியானது ஒரு சாட்-ஐ ஆர்ச்சிவ் செய்ய (Archive Chat) அனுமதிக்கும்.
5.Alt + Ctrl + U
Alt + Ctrl + U ஆனது ஒரு மெசேஜை அன்ரீட் என்று மார்க் செய்ய அனுமதிக்கும் (Mark as Unread)
6.Alt + Ctrl + Tab
Alt + Ctrl + Tab வசதியானது அடுத்த சாட்-டிற்கு செல்ல (Next Chat) பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
7.Alt + Ctrl + N
Alt + Ctrl + N ஷார்ட்கட்ஸ் ஆனது புதிய க்ரூப் உருவாக்க (New Group) பயன்படுகிறது.
8. Alt + Ctrl + ,
Alt + Ctrl + , வசதியானது செட்டிங்ஸ் -ற்கு செல்ல (Settings) அனுமதி கொடுக்கும்.
9.Alt + Ctrl + F
Alt + Ctrl + F ஷார்ட்கட்ஸ் ஆனது குறிப்பிட்ட சாட்-ஐ தேட (Search Chat) உதவுகிறது.
10. Alt + Ctrl + M
Alt + Ctrl + M வசதியானது ம்யூட் செய்ய (Mute) அனுமதிக்கும்.
11.Alt + Ctrl + Backspace
Alt + Ctrl + Backspace வசதியானது குறிப்பிட்ட சாட்-ஐ டெலிட் செய்ய (Delete Chat) அனுமதிக்கிறது.
12.Alt + Ctrl + Shift + Tab
Alt + Ctrl + Shift + Tab ஷார்ட்கட்ஸ் ஆனது முந்தைய சாட்-டிற்கு செல்ல (Previous Chat) உதவுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக