Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 9 ஜனவரி, 2021

Whatsapp: புதிய விதியால் கோவப்பட்ட பயனர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? நீங்க மாறிடீங்களா?

 Whatsapp: புதிய விதியால் கோவப்பட்ட பயனர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? நீங்க மாறிடீங்களா?

Whatsapp தனியுரிமைக் கொள்கை புதுப்பிப்பு பல பயனர்களை கோபப்படுத்தியுள்ளது. பயனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு இறுதி எச்சரிக்கையை Whatsapp வழங்கியுள்ளது. இல்லையெனில், அவர்களின் Whatsapp கணக்குகள் நீக்கப்படும்! இந்த சூழ்நிலையில், பலர் Whatsapp-க்கான மாற்று வழிகளை நோக்கிச் செல்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து, டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற பல செய்தியிடல் செயலிகள் அவற்றின் தளங்களில் பெரும் எழுச்சியைக் கண்டுள்ளன. மேலும் பேஸ்புக்கிற்குச் சொந்தமான Whatsapp அதன் தனியுரிமைக் கொள்கைகளை மாற்றிய பின்னர் சமூக ஊடக தளங்களிலும் இந்த இரு செய்தியிடல் செயலிகளும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றன.

Whatsapp சமீபத்தில் அதன் புதிய விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை புதுப்பித்துள்ளது. அதில் அதன் பயனர்களை மாற்றங்களை ஏற்கும்படி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. அப்படி செய்யத் தவறினால், Whatsapp கணக்கு (Whatsapp Account) நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. Whatsapp-ன் புதிய சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், உலகின் மிகப் பெரிய பணக்காரரான டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) சிக்னல் போன்ற செயலிகள் Whatsapp –க்கான நல்ல மாற்றாக இருக்கும் என்று ட்வீட் செய்தவுடனேயே அந்த செயலியின் பதிவிறக்கத்தில் அதிக அளவு அதிகரிப்பு ஏற்பட்டது.

சிக்னல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அகௌண்டிலிருந்து, “சரிபார்ப்புக் குறியீடுகள் தற்போது பல வழங்குநர்களிடையே தாமதமாகிவிட்டன. ஏனெனில் பல புதிய நபர்கள் இப்போது சிக்னலில் சேர முயற்சிக்கிறார்கள் (தற்போது எங்கள் உற்சாகத்திற்கு அள்வே இல்லை). இதை விரைவாக தீர்க்க கேரியர்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். தயவு செய்து காத்திருங்கள்” என்று ட்வீட் செய்தது.

“அனைவரும் மீண்டும் தாமதமின்றி பதிவு செய்ய முடியும். சரியான தேர்வுகளை செய்தமைக்கு மிக்க நன்றி” என்று மேலும் கூறப்பட்டது.

மேலும், மற்றொரு செய்தியிடல் செயலியான டெலிகிராம், Whatsapp-ன் புதிய புதுப்பித்தலுக்குப் பிறகு ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களிலும் பிரபலமாகி வருகிறது.

"வரலாற்றில் மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்று நடக்கிறது. சில தனியுரிமைக் கொள்கை புதுப்பிப்புகளின் விளைவால் கணிசமான பயனர்கள் #Whatsapp –லிருந்து #Telegram –க்கு மாறுகிறார்கள்” என்று ஒரு ட்விட்டர் பயனர் எழுதினார்.

புதுப்பிக்கப்பட்ட Whatsapp கொள்கை (Whatsapp Privacy Policy) அறிக்கை, "எங்கள் சேவைகளை நீங்கள் நிறுவும்போது, ​​அணுகும்போது அல்லது பயன்படுத்தும் போது, எங்கள் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, தனிப்பயனாக்க, ஆதரவு மற்றும் சந்தைப்படுத்த Whatsapp சில தகவல்களைப் பெற வேண்டும் அல்லது சேகரிக்க வேண்டும்." என்று கூறியுள்ளது.

இதற்கிடையில், அதன் நிறுவன செயலிகலுக்கிடையே செய்தி பகிர்வு மற்றும் கிராஸ் மெசேஜிங்கை அனுமதிக்கும் முயற்சியாக, பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேட்களை இணைக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக் சமூக நெட்வொர்க் ஏற்கனவே இணையத்தில், Whatsapp உடன் மெசஞ்சர் ரூம்களை ஒருங்கிணைத்துள்ளது.

"எடுத்துக்காட்டாக, Whatsapp-ல் உள்ள விஷயங்களுக்கு பணம் செலுத்த உங்கள் பேஸ்புக் பே கணக்கை இணைக்க உங்களை அனுமதிப்பது, உங்கள் Whatsapp கணக்கை இணைத்து, போர்டல் போன்ற பிற பேஸ்புக் நிறுவன தயாரிப்புகளில் உங்கள் நண்பர்களுடன் சேட் செய்ய உதவுவது ஆகியவை செய்யப்படுகின்றன” என்று புதிய கொள்கை விளக்கியது.

பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கும் முயற்சியாக Whatsapp-ன் புதிய புதுப்பித்தல் பார்க்கப்படுகிறது. இதனால் கோவமடைந்த பயனர்கள், பெரும் அளவில் சிக்னல் டெலிகிராம் போன்ற செயலிகளை நோக்கி படையெடுக்கிறார்கள்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக