Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 2 ஜனவரி, 2021

முதல் 5 நிமிடத்தில் 350,000 யூனிட்கள் விற்று தீர்த்த Xiaomi Mi 11 ஸ்மார்ட்போன்.. அப்படி என்ன இருக்கு இதில்?

5 நிமிடத்தில் மொத்தமாக 350,000 யூனிட் விற்பனையா?

ஜனவரி 1, நேற்று சீனாவில் விற்பனைக்கு வந்த சியோமி Mi 11 சாதனம் விற்பனை துவக்கிய முதல் ஐந்து நிமிடங்களில் சுமார் 350,000 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 28 அன்று நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கு இப்படி ஒரு டிமாண்ட் இருப்பதற்கான ஒரு முக்கிய காரணம், இதன் சிறப்பம்சமாகும். அப்படி என்ன ஸ்பெஷல் இந்த போனில் உள்ளது என்று பார்க்கலாம் வாங்க.

5 நிமிடத்தில் மொத்தமாக 350,000 யூனிட் விற்பனையா?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் அறிமுகமான முதல் சியோமி ஸ்மார்ட்போன் இதுவாகும்.

சியோமி குழுமத்தின் துணைத் தலைவரும், ஸ்மார்ட்போன் துறையின் தலைவருமான ஜெங் சூய்சோங்கை மேற்கோள் காட்டிய அறிக்கை, சியோமி மி 11 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை துவங்கிய 5 நிமிடத்தில் மொத்தமாக 350,000 யூனிட்களும் விற்பனையாகியுள்ளது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

முதல் ஏழு மணி நேரத்தில் எத்தனை யூனிட் விற்பனை என்று தெரியுமா?

இந்த புதிய சியோமி Mi 11 ஸ்மார்ட்போன் சீனாவில் நேற்று அதிகாலை 12.00 மணிக்கு சீனாவில் விற்பனைக்கு வந்தது, முதல் 5 நிமிடங்களில் சியோமி மி 11 ஓம்னி-சேனல் விற்பனை மூலம் சுமார் 1.5 பில்லியனை யூனிட்களை தாண்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறித்து. தோராயமாக இது சுமார் ரூ. 1,677 கோடி ஆகும். மற்றொரு அறிக்கையின்படி, முதல் ஏழு மணி நேரத்திற்குள் 854,000 சியோமி மி 11 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது

சியோமி மி 11 விலை மற்றும் விவரங்கள்

சியோமி மி 11 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ .45,000 ஆகும். இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை தோராயமாக ரூ. 48,300 ஆகும். அதேபோல், இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை தோராயமாக ரூ. 52,800 ஆகும். இந்த போன் ஹாரிசன் ப்ளூ, ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் மிட்நைட் கிரே வண்ணங்களில் விற்பனை வந்துள்ளது.

சியோமி மி 11 சிறப்பம்சம்

  • 6.81' இன்ச் 2K WQHD 1440 x 3200 பிக்சல் கொண்ட AMOLED டிஸ்பிளே
  • 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
  • ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்
  • 12 ஜிபி வரை எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ்
  • MIUI 12 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
  • டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு
  • 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா சென்சார்
  • 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார்
  • 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸுடன் சென்சார்
  • 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
  • இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
  • டூயல் நானோ சிம்
  • 55W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
  • 4600 எம்ஏஎச் பேட்டரி
 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக