Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 2 ஜனவரி, 2021

ஆயிரத்தில் ஒருவன் இளவரசன் மீண்டும் 2024இல் வருவான் – தனுஷ்

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், 2024 ஆம் ஆண்டு படம் வெளியாகும் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் நடிப்பில், செல்வராகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், பாகம் 2 வரும் என்றே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போது அந்தப் படம் மக்களிடேய வரவேற்பு பெறாததால் பாகம் 2 கைவிடப்பட்டது.

பின்னர், படத்தின் கதைக்களமும், பின்னனி இசையும் நாட்கள் செல்ல செல்ல பலரையும் ஈரத்தது, ஆண்டுகள் கடந்த பிறகே ஆயிரத்தில் ஒருவன் வெகுஜன மக்களிடையே சென்றடைந்தது. அவ்வப்போது ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 எப்போது வரும் என்று கேள்விகள் எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

தற்போது கொரோனா பரவலுக்கு மத்தியில் ஆயிரத்தில் ஒருவன் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதனை நடிகர் தனுஷ் ரீடுவிட் செய்து, இளவரசன் மீண்டும் 2024 இல் வருவான் என்று பதிவிட்டுள்ளார். ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், முன்தயாரிப்பு பணிகள் மட்டும் ஒருவருடம் ஆகிவிடும் என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக