தகவல் தொழில்நுட்பம் நமக்கும் பல்வேறு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. அதுவும் இந்த தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் வேளாண் பெருமக்களுக்கு தேவையான முக்கிய தகவல்களை சேர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
அதன்படி கடந்த 2019-ம் வருடம் உழவன் மொபைல் ஆப் வசதியானது தமிழ் மற்றம் ஆங்கில மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆப் வசதியை 5 லட்சம் பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சிறப்பான அம்சங்களுடன் இந்த ஆப் வசதி வெளிவந்துள்ளது.
மேலும் இந்த ஆப் வசதியானது கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. எனவே இதை எளிமையாக டவுன்லோடு செய்து உங்கள் போனில் இன்ஸ்டால் செய்தவுடன், பெயர், இடம், உள்ளிட்ட சில விவரங்களை பதிவிட வேண்டும்.
பின்பு இந்த செயலியில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்று சற்று விரிவாகப் பார்ப்போம். முதலில் இந்த செயலியில் உள்நுழைந்தவுடன் மாணியத்திட்டங்கள் இருக்கும். அதாவது எவற்றுக்கெல்லாம் மாணியத்த திட்டங்கள் இருக்கிறது, இல்லை போன்ற விவரங்களை எளிமையாக தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக இதன் வகை என்ன, வகுப்பு என்ன போன்றவற்றை
தெளிவாக தெரிந்துகொள்ள முடியும். இதற்குவேண்டி நீங்கள் அரசு அலுவலகம் போக வேண்டியதில்லை.
அடுத்து பயிர் காப்பீட்டுத் திட்டம் பற்றி இந்த செயலியில் தெரிந்துகொள்ள முடியும். அதாவது பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கட்டணம் பற்றி தெரிந்துகொள்ள முடியும். பின்பு இதற்கு எங்கெல்லாம் இடம் உள்ளது எனத் தெரிந்துகொள்ள முடியும்.
மேலும் இந்த செயலியில் விதைகள், உரங்கள் இருப்பு நிலை எவ்வளவு இருக்கிறது என்று எளிமையாக அறிந்துகொள்ள முடியும். பின்பு விதைகள், உரங்கள் யாரிடம் உள்ளது, இதை வைத்துள்ளவர்களின் மொபைல் எண் போன்றவற்றை தெரிந்துகொண்டு எளிமையாக வாங்க முடியும்.
அடுத்து இந்த செயலியில் வேளாண் இயந்திரம் வாங்க வாடகை மையம் உள்ளது. அதாவது உங்களுக்கு ஒரு டிராக்டர் தேவையென்றால் அரசு அல்லது தனியாரிடம் குறிப்பிட்ட தொகை செலுத்தி வாங்க முடியும். பின்பு நீங்கள் விவசாயம் செய்த காய்கறி உட்பட பல்வேறு பொருட்களை விற்க சரியான விலையை இந்த ஆப் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
வானிலை சார்ந்த விவரங்களையும் இந்த ஆப் மூலம் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் வேளாண் அலுவலர் வருகையையும் இந்த செயலியின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். மேலும் மாவட்டம், வட்டாரம், பஞ்சாயத்து போன்றவற்றை இந்த செயலியில் தேர்வு செய்து வேளாண் அலுவலர் பெயர், தொலைபேசி எண் போன்றவற்றையும் தெரிந்துகொள்ள முடியும். இன்றும் இந்த செயலியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மிகவும் பயனுள்ள வகையிலும் உள்ளது.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக