Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 2 ஜனவரி, 2021

விரைவில் புதிய பிட்டனஸ் பேண்ட் அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்.!

 ஒன்பிளஸ் நிறுவனம்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது. குறிப்பாக அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 8டி உள்ளிட்ட சில ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கென ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் பேண்ட் சாதனத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் வெளிவந்த தகவலின்படி ஒன்பிளஸ் பேண்ட் ஆனது இந்திய சந்தையில் ரூ.3 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் AMOLED டிஸ்ப்ளே, பல நாட்கள் பேக்கப் வழங்கும் பேட்டரி, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து வியர் ஒஎஸ் தளத்தை மேம்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்பிளஸ் வாட்ச் மாடலிலும் கூகுள் பிளாட்பார்ம் கொண்டிருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக