சமூகவலைதள பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கோவிட்-19 பரவலின் போது ஏராளமானோர் தங்களது பெரும்பாலான நேரத்தை சமூகவலைதளங்களில்தான் செலவிட்டனர்.
சமூகவலைதள பயன்பாடு
வங்கியில் கூட கணக்கில்லாமல் இருக்கலாம் ஆனால் ஏதேனும் சமூகவலைதளங்கள் ஒன்றிலாவது கணக்கில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. சமூகவலைதள பயன்பாட்டுக்கு என்றே ஏணையோர் ஸ்மார்ட்போன்களை வாங்கி வருகின்றனர்.
வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர்
சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பது வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்றே கூறலாம். இதுபோன்ற செயலிகளை நாம் தினசரி ஒரே மாதிரியான சேவைகளை பயன்படுத்தி வருகிறோம். அதில் பல்வேறு அம்சங்கள் இருக்கிறது என்பதே நாம் ஆராய்வதில்லை.
பல்வேறு புதிய அம்சங்கள்
சமூகவலைதள பயன்பாடுகளில் பிரதான ஒன்றாக இருப்பது வாட்ஸ்ஆப். வாட்ஸ்அப் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. பல்வேறு தேவைகளுக்கு வாட்ஸ்ஆப் பயன்பாடு என்பது பிரதானமாக இருந்து வருகிறது.
பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்
வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்தும்போது நமது பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். சமூகவலைதளங்களில் நமது தனிநபர் விவரங்கள், புகைப்படங்கள் என ஏராளமானவை உள்ளன. அதேபோல் வாட்ஸ்அப்பில்தான் தமது முக்கிய புகைப்படங்களை தேவையான நபருக்கு அனுப்ப பயன்படுத்துகிறோம்.
பாதுகாப்பாக கையாளுவது எப்படி
அத்தகைய சமூகவலைதள பயன்பாட்டை பாதுகாப்பாக கையாளுவது என்பது முக்கியம். நமது வாட்ஸ்அப் பயன்பாட்டில் பிறர்யாரும் ஊடுருவவில்லை என கண்டிப்பாக சொல்லிவிட முடியாது. எனவே யாரும் ஹேக் செய்யாதவகையில் வாட்ஸ் அப் செயலியை கையாளுவது எப்படி என பார்க்கலாம்.
இரட்டை அங்கீகாரம் செயல்பாடு
தங்களது வாட்ஸ்அப் கணக்கில் பிறர் யாரும் ஊடுருவ வேண்டாம் என்றால் இரட்டை அங்கீகாரம் அதாவது Two Factor Authentication பயன்பாட்டை செயல்படுத்த வேண்டும். இதை எப்படி செயல்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
செயல்படுத்துவதற்கான வழிமுறைகள்
வாட்ஸ்அப் செயலியை திறந்து வாட்ஸ்அப் செட்டிங்ஸ் ஆப்ஷனை திறக்க வேண்டும். பின் Tab Account ஆப்ஷனை கிளிக் செய்து two step verification ஆப்ஷனை enable செய்ய வேண்டும். பின் ஆறு இலக்கு Pin எண்ணை தங்களது தேர்வுப்படி பதிவிட்டு உறுதி செய்ய வேண்டும்.
தகவல்கள் புகைப்படங்களை பாதுகாப்பாக கையாள வேண்டும்
அதன்பின் நீங்கள் அணுகக்கூடிய இமெயில் ஐடியை பதிவிட வேண்டும் அல்லது இமெயில் ஐடியை சேர்க்க விரும்பவில்லை என்றால் அதை ஸ்கிப் செய்துவிட வேண்டும். இமெயில் ஐடி பதிவிட்டால் அதை உறுதி செய்து சேமிப்பு தேர்வை கிளக் செய்யவேண்டும். அதேபோல் வாட்ஸ்அப் பயன்பாட்டுக்கு கைரேகை லாக்(Finger print Lock) செய்து தங்களது தனியுரிமை தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை பாதுகாக்கலாம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக