Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 4 ஜனவரி, 2021

கணவர்களே... இதை மட்டும் செய்துவிடாதீர்கள்... இது சிரிப்பதற்கு மட்டுமே... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!

----------------------------------------------

ஆசிரியர் : எதுக்கு டேபிளை எடுத்துக்கிட்டு பள்ளிகூடத்துக்கு வந்திருக்க?

மாணவன் : நீங்கதான சார் நேத்து சொன்னீங்க.. நாளைக்கு டேபிள்ஸ் கேப்பேன்னு.

ஆசிரியர் : 😬😬

----------------------------------------------

ஆசிரியர் : நேத்து தலைவலின்னு ஒருநாள் லீவு எடுத்த. இன்னைக்கு கால்வலின்னு ரெண்டு நாள் லீவு கேட்குற..

மாணவன் : அதுவா சார்? தலை ஒன்னுதான் இருக்கு.. ஆனா கால் ரெண்டு இருக்கே..

ஆசிரியர் : 😳😳

----------------------------------------------

தன்னம்பிக்கை வரிகள்...!

----------------------------------------------

வாழ்க்கையில் வேகமாக முன்னேறவில்லையே என்று கவலைப்படுவதை விட, பின் வாங்காமல் ஒவ்வொரு நாளும் விடாமுயற்சியோடும், நம்பிக்கையோடும் தொடர்ந்து முன்னோக்கி நடைபோடுங்கள்.

 

அதுவே உங்கள் வெற்றிக்கான வழியாகும். 

 

ஏனெனில், உலகில் ஒரே நாளில் உயர்ந்தவர்கள் யாருமில்லை.

 

ஒவ்வொரு வலியும் ஒவ்வொரு பாடத்தைத் தரும். ஒவ்வொரு பாடமும், ஒரு மாற்றத்தைத் தரும்.

 

அத்தகைய மாற்றம் நீங்கள் வாழ்வின் வலிகளை ஏற்றுக் கொள்ளும்போது நல்வழிக்கான மாற்றமாக பிறக்கும்.

 

எவரொருவர் தன்னால் முடியும் என்று நம்புகிறாரோ, அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்.

----------------------------------------------

கணவர்களே... இதை மட்டும் செய்துவிடாதீர்கள்...!!

----------------------------------------------

மனைவியிடம் பொய் சொல்லாதீங்க...

ஏன்னா அவங்க உண்மையை தெரிஞ்சு வெச்சுக்கிட்டுதான்

கேள்வியே கேப்பாங்க...

----------------------------------------------

இது சிரிப்பதற்கு மட்டுமே...!!

----------------------------------------------

நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரான ரயிலின் ஓட்டுநரிடம் விசாரணை நடந்தது.

 

விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார்.

 

தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று அவர் சொன்னார்.

 

நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்? அப்படியே அவன் மீது ரயிலை ஏற்றிவிட்டு சென்றிருக்கலாமே என்று நீதிபதி கேட்டார்.

 

அதற்கு ரயிலின் ஓட்டுநர் சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி ஓட ஆரம்பித்துவிட்டான், விடுவனா...😆😎

----------------------------------------------

குறளும், பொருளும்...!!

----------------------------------------------

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

 

பொருள் :

 

அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!