Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 4 ஜனவரி, 2021

துலாம் ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிரனுடன் சனிபகவான் நட்பு என்ற நிலையில் மட்டுமல்லாமல் உச்சம் என்ற அமைப்பில் நின்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி நாம் காண்போம்.

🌟 பருமனான அதே சமயம் கம்பீரமான தோற்றத்தையும் கொண்டவர்கள். 

🌟 சத்தமாகவும், மென்மையாகவும் அதே சமயம் உடன் இருப்பவர்களுக்கு ஏற்றவாறு உரையாடும் குணமும் உடையவர்கள்.

🌟 எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படும் குணநலன்களை உடையவர்கள்.

🌟 தவறு என்னும் பட்சத்தில் மற்றவர்களின் அறிவுரையை ஏற்று அதற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 உடன் இருப்பவர்களை தகுந்த முறையில் எடைப்போடும் வல்லமை கொண்டவர்கள். 

🌟 உதவி செய்யும் குணம் கொண்டவர்கள்.

🌟 எவரிடமும் விழிப்புணர்வுடன் இருக்கக்கூடியவர்கள்.

🌟 விளம்பரப்பிரியர்கள். சிறிய உதவியாக இருந்தாலும் பெரிய கொடை வள்ளல் போல் தன்னை காட்டிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 தொழில் நுணுக்கம் அறிந்தவர்கள். தொழில் சார்ந்த பலவிதமான திறமைகளையும், யுக்திகளையும் அறிந்தவர்கள்.

🌟 இவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை அவ்வளவு எளிதில் அறிந்துக்கொள்ள முடியாது.

🌟 எவரையும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்.

🌟 அதிக நினைவுத்திறன் கொண்டவர்கள்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!