-------------------------------------------------
கலக்கலான காமெடிகள்...!!
----------------------------------------------
சீனு : நானும் எனக்கு தெரிஞ்ச is, was, known as -னு எல்லாத்தையும் போட்டு Englishபரீட்சை எழுதிக்கிட்டு இருந்தேன்...
ராமு : அப்புறம் என்னடா ஆச்சு...?
சீனு : அப்புறம்தான் சொல்லறாங்க... அது கணக்கு பரீட்சைன்னு...
ராமு : 😂😂
----------------------------------------------
அருண் : 25 வயசாச்சே... இன்னுமாடா ரோட்டுல போற நாய்க்கெல்லாம் பயப்படுற?...
குமார் : 25 வயசுன்னு எனக்கு தெரியும்... நாய்க்கு தெரியுமா?
அருண் : 😳😳
----------------------------------------------
அட அப்படியா?
----------------------------------------------
பூஜ்ஜியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு எது?
.
.
.
.
இந்தியா
உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு எது?
.
.
.
.
தபால் தலை சேகரிப்பு
வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது?
.
.
.
.
வைட்டமின் 'பி"
----------------------------------------------
வாழ்க்கையின் அடையாளம்...!!
----------------------------------------------
நம் நிலை கண்டு கை கொட்டி சிரித்தவர்களை
கைதட்டி பாராட்ட வைப்பதே
வெற்றிகரமான வாழ்க்கையின் அடையாளம்...
----------------------------------------------
நாட்டு சர்க்கரை...!!
----------------------------------------------
நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் நீங்கி ரத்தம் சுத்தமாகிறது.
மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
பொழுதுபோக்கு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக