Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

4 ஜிபி ரேம் உடன் மோட்டோ இ7 பவர்: அட்டகாச அம்சங்களோடு ரூ.8,299 மட்டுமே!

6.5 இன்ச் அளவிலான மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களுடன் மோட்டோ இ 7 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. என்ன விலை, எப்போது முதல் விற்பனை, எதன் வழியாக வாங்க கிடைக்கும், என்னென்ன அம்சங்கள், இதோ முழு விவரங்கள்.

மோட்டோ இ 7 பவர் ஆன்லைனில் டீஸ் செய்யப்பட்ட சில நாட்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் மற்றும் டூயல் பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது.

மேலும் மோட்டோ இ 7 பவர் ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரியையும் கொண்டுள்ளது, இது சார்ஜில் ஒரு முழு சார்ஜில் இரண்டு நாட்கள் பயன்பாட்டை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

தவிர, இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவம், நீர் விரட்டும் வடிவமைப்பு மற்றும் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் போன்ற மற்ற சில கவனிக்க வேண்டிய அம்சங்களும் உள்ளன.

புதிய மோட்டோ இ 7 பவர் ஸ்மார்ட்போன் ஆனது ரெட்மி 9ஐ, இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 மற்றும் ரியல்மி சி 15 போன்றவற்றுக்கு எதிராக போட்டியிடும் என்று நம்பப்படுகிறது.

மோட்டோ இ 7 பவர் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்:


இந்தியாவில் மோட்டோ இ 7 பவர் ஸ்மார்ட்போனின் 2 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.7,499 க்கும், 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.8,299 க்கும் அறிமுகமாகி உள்ளது.


இந்த ஸ்மார்ட்போன் கோரல் ரெட் மற்றும் டஹிடி ப்ளூ கலர் விருப்பங்களில் வருகிறது. இது பிப்ரவரி 26 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் (நண்பகல்) பிளிப்கார்ட் மற்றும் முன்னணி சில்லறை கடைகள் வழியாக விற்பனைக்கு வரும்.

மோட்டோ இ 7 பவர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட மோட்டோ இ 7 பவர் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. இது 6.5 இன்ச் எச்டி + அளவிலான (720x1,600 பிக்சல்கள்) மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளேவை 20: 9 என்கிற திரை விகிதத்துடன் கொண்டுள்ளது.

ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 25 SoC மூலம் இயக்கப்படுகிறது மாற்றம் இது 4 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்-ஐ கொண்டுள்ளது.



கேமராக்களை பொறுத்தவரை, இது எஃப் / 2.0 லென்ஸுடன் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் எஃப் / 2.4 மேக்ரோ லென்ஸுடன் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் ஆகியவற்றைக் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, மோட்டோ இ 7 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 5 மெகாபிக்சல் கேமரா சென்சாரை (எஃப் / 2.2 லென்ஸ்) கொண்டுள்ளது.

மேலும் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ஆனது போர்ட்ரேட் மோட், பனோரமா, ஃபேஸ் பியூட்டி, மேக்ரோ விஷன், மேனுவல் மோட் மற்றும் எச்டிஆர் உள்ளிட்ட ப்ரீ லோடட் கேமரா அம்சங்களையும் கொண்டுள்ளது மேலும் இந்த ஸ்மார்ட்போன் கூகுள் லென்ஸ் ஒருங்கிணைப்புடன் வருகிறது.

மோட்டோ இ 7 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 32 ஜிபி மற்றும் 64 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் விருப்பங்களைக் கொண்டுள்ளது, மேலும் இவை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடிய (1 டிபி வரை) ஆதரவையும் கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளைக் கொண்டுள்ளது.


சென்சார்களை பொறுத்தவரை, accelerometer, ambient light மற்றும் proximity சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் இது நிறுவனத்தின் "பேட்விங்" லோகோவுக்குள் புத்திசாலித்தனமாக அமைந்துள்ள ஒரு கைரேகை சென்சாரையும் கொண்டுள்ளது.

மோட்டோ இ 7 பவர் ஸ்மார்ட்போன் ஒரு 5,000 எம்ஏஎச் பேட்டரியை பேக்செய்கிறது. இது 10W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

இதன் பேட்டரி 76 மணிநேர மியூசிக் ஸ்ட்ரீமிங், 14 மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங் அல்லது 12 மணிநேர வெப் ப்ரவுஸிங்கை சிங்கிள் சார்ஜில் வழங்குவதாகக் கூறப்படுகிறது. கடைசியாக இது அளவீட்டில் 165.06x75.86x9.20 மிமீ மற்றும் 200 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக