எரிபொருள் விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. மறுபுறம் வாகன அதிகரிப்பு காரணமாக சுற்றுச்சூழல் மாசும் ஏற்பட்டு வருகிறது. பெட்ரோல் விலை லிட்டர் ரூ.90-ஐ கடந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ஐஐடி மெட்ராஸ்
இந்த நிலையில் ஐஐடி மெட்ராஸ் இன்குபேட்டட் ஸ்டார்ட் அப் சமீபத்தில் பைமோ என்ற மின்சார பைக்கை அறிமுகப்படுத்தியது. பை பீம்-ன் இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஸ்மார்ட்போனைவிட வேகமாக சார்ஜ் செய்ய முடியும் என கூறப்படுகிறது.
பைமோ வாகனம் ஓட்டுவதற்கு உரிமம்
குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் சைக்கிள் போல் தோற்றமளிக்கும் இந்த பைமோ வாகனம் ஓட்டுவதற்கு உரிமம், பதிவு தேவையில்லை என தெரிவிக்கப்படுகிறது. பைமோ வாகனத்தின் விலை மிகவும் சிக்கனமாகவே இருக்கிறது.
பைமோ வாகனத்தின் விலை ரூ.30,000
பைமோ வாகனத்தின் விலை ரூ.30,000 என்ற விலையில் இருக்கிறது. இதற்கு எரிபொருள் செலவுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டரி இடமாற்ற வசதியும் இதில் இருக்கிறது. இதில் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியில் இருந்து மற்றொன்றுக்கு சக்தியை பரிமாறிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
எலெக்ட்ரானிக் பைக்குகளில் பைமோ
இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் குறிப்பிட்ட எலெக்ட்ரானிக் பைக்குகளில் பைமோ ஒன்றாகும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இதில் பொருத்தப்பட்டிருக்கும் சாதனங்கள், பேட்டரிகள் என 90 சதவீத வகைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகும்.
நுழைவு நிலை மின்சார இருசக்கர வாகனம்
நுழைவு நிலை மின்சார இருசக்கர வாகனங்களுக்கு இணை போட்டியாக பைமோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சைக்கிள் போல் தோற்றமளிக்கும் இந்த வாகனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக்கூடியவை, இதில் எல்இடி லைட், ஒலி எழுப்பி, இருசக்கர டிஸ்க் பிரேக் என பல அம்சங்கள் இருக்கிறது.
25 கிலோமீட்டர் வேகத்தில் பயணம்
இதில் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 50 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். இதை முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணிநேரமே ஆகிறது. இதை அப்படியே சார்ஜ் செய்யலாம் அல்லது பேட்டரியை கலட்டியும் சார்ஜ் செய்யலாம்.
வாகன விற்பனை இலக்கு
ஓட்டுனருக்கு தேவையான அனைத்து சொகுசு அம்சமும் இதில் இருக்கிறது. இதில் சாக்கப்சர் உட்பட அனைத்து சௌகரியங்களும் இருக்கிறது. இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கை இதில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாகனத்துக்கு அமோக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பை பீம் வாகனங்கள் 2021-22 நிதியாண்டில் 10000 வாகனங்கள் விற்பனை இலக்காகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக