Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 13 பிப்ரவரி, 2021

நீங்கள் எதிர்பார்த்த வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 6300 4ஜி பீச்சர் போன்.! விலை இவ்வளவு தான்.!

நோக்கியா 6300 4ஜி பீச்சர் போன்

எச்எம்டி குளோபல் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நோக்கியா 6300 4ஜி பீச்சர் போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்தது. தற்சமயம் வந்த தகவலின்படி இந்த பீச்சர் போன் மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 6300 4ஜி பீச்சர் போன்

குறிப்பாக அமெரிக்காவில் $69.99 விலையில் கிடைக்கிறது நோக்கியா 6300 4ஜி பீச்சர் போன் மாடல். அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,100-ஆக உள்ளது. மேலும் சியான் கிரீன், வெள்ளை, Charcoal உள்ளிட்ட நிறங்களில் இந்த பீச்சர் போன் மாடல் வெளிவந்துள்ளது.

2.4-இன்ச் QVGA ஐபிஏ டிஸ்பிளே

நோக்கியா 6300 4ஜி பீச்சர் போன் ஆனது 2.4-இன்ச் QVGA ஐபிஏ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான பீச்சர் போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர்

இந்த சாதனத்தில் 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்

நோக்கியா 6300 4ஜி பீச்சர் போனில் KaiOS வசதி உள்ளது. எனவே கூகுள் அசிஸ்டெண்ட், யூடியூப், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சில செயலிகளை இந்த சாதனத்தில் பயன்படுத்த முடியம். மேலும் இந்த சாதனம் வைஃபை ஹாட்ஸ்பாட்டுக்கான  ஆதரவோடு வருகிறது.

4ஜிபி மெமரி வசதி

நோக்கியா 6300 4ஜி பீச்சர் மாடலில் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக 32ஜிபி மெமரி ஆதரவு இவற்றுள் அடக்கம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

1500 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 6300 4ஜி பீச்சர் மாடலில் 1500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் ஒரு ஃபிளாஷ் உடன் விஜிஏ கேமராவும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!