Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 10 பிப்ரவரி, 2021

Airplane Mode ON-யில் இருந்தாலும் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தலாம் - எப்படி?

 

ஸ்பேம் அழைப்புகளைக் கட்டுப்படுத்த தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், வாடிக்கையாளர்கள் இன்னும் இந்த தேவையற்ற அழைப்புகளால் அவஸ்த்தைப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றனர். 

அதற்கு தான் சமீபத்தில் DND என்ற அம்சத்தை செயல்படுத்துவது எப்படி என்று பார்த்திருந்தோம். இன்னும் நீங்கள் அந்த தகவலைப் படிக்கவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து படிக்கலாம். ஆனால், சில நேரங்களில் நீங்கள் கேம்களை விளையாடும்போது அல்லது OTT இயங்குதளங்களில் திரைப்படங்களைப் பார்க்கும்போது சாதாரண இன்கமிங் அழைப்புகளால் உங்களுக்கு தொல்லையாக இருக்கும்.

அதுபோன்ற நேரங்களில், பயனர்கள் விமானப் பயன்முறையைப் (Flight Mode) பயன்படுத்தலாம். இன்கமிங் அழைப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்த விமானப் பயன்முறை உங்களை அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், Flight Mode ஆன் செய்தால் உங்களால் மொபைல் டேட்டாவை இயக்க முடியாது. 

அது போன்ற சமயத்தில், நீங்கள் Flight Mode உடன் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் பின்வரும் இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த உதவிக்குறிப்புகள் குரல் அழைப்புகளையும் பெறாமல் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்த அனுமதிக்கும்.

- உங்கள் ஸ்மார்ட்போனில் அழைப்பு அமைப்புகளை (call settings) நீங்கள் திறக்க வேண்டும்.  - பின்னர், நீங்கள் மொபைல் டேட்டாவை இயக்கி விமானப் பயன்முறைக்கு மாற வேண்டும்.  - அதன் பிறகு, பயனர்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் * # * # 4636 # * # * என்ற எண்ணை டயல் செய்ய வேண்டும். - அங்கு காண்பிக்கப்படும் மெனுவில் மொபைல் டேட்டா அணுகலுக்கு Phone Info என்பதை  கிளிக் செய்ய வேண்டும். - நீங்கள் அதை கிளிக் செய்ததும், Mobile Radio Power எனும் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.  - அவ்வளவுதான் இப்போ நீங்க எப்போவும் போல மொபைல் டேட்டா யூஸ் பண்ணலாம். உங்களுக்கு இன்கமிங் அழைப்புகள் பிரச்சினை எதுவும் இருக்காது.

ஸ்மார்ட்போனில் Settings அம்சத்தைத் திறந்து call forwarding விருப்பத்தைக்  கிளிக் செய்யவும். இப்போது, ​​நீங்கள் Always Forward, Forward when Busy, Forward When unanswered போன்ற மூன்று விருப்பங்களைக் காண்பீர்கள். 

- இப்போது, அவற்றில் Always Forward என்ற முதல் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும். - இப்போது நீங்கள் சுவிட்ச் செய்யப்பட்டிருக்கும் அல்லது செயல்பாட்டிலேயே இல்லாத ஒரு மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். - இப்போது, ​​நீங்கள் Enable பட்டனைத் தட்ட வேண்டும்.  - அவ்வளவுதான், மொபைல் டேட்டா ஆனில் இருக்கும்போதும் அழைப்புகள் வந்தாலும் அது ஃபார்வேர்டு செய்யப்படும். உங்களுக்கு எந்த  தொந்தரவும் இருக்காது. 

அழைப்புகளை அனுமதிக்க உங்களுக்கு விருப்பம் இல்லாத நிலையில் இந்த இரண்டு வழிகளும் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, திரையின் மேலே எந்த ஐகானையும் நீங்கள் பார்க்க முடியாது விமானப் பயன்முறை (Flight Mode) ஐகான் மட்டுமே தோன்றும். உங்கள் வேலையைச் செய்து முடித்ததும், விமானப் பயன்முறையை ஆஃப் செய்து விட்டு எப்போதும் போல அழைப்புகளைப் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக