இந்தியாவில் டிக்டாக் உட்பட 59 சீன பயன்பாடுகள் தடை செய்யப்பட்ட பின்னர் இன்ஸ்டாகிராம் கடந்த ஆண்டு ரீல்ஸை அறிமுகப்படுத்தியது. இப்போது இன்ஸ்டாகிராம் மறுசுழற்சி செய்யப்பட்ட டிக்டாக் வீடியோகளை ரீல்ஸில் விளம்பரப்படுத்தப்படாது என்று அறிவித்துள்ளது.
ரீல்ஸ் பயனர்கள் இனி டிக்டாக் வீடியோக்களை பதிவிட கூடாது
சமீபத்தில் ரீல்ஸ் பயனர்கள் அவர்களின் டிக்டாக் வீடியோகளை பதிவுசெய்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய பிறகு நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதுபோன்ற வீடியோக்களை ரீல்ஸில் விளம்பரப்படுத்த மாட்டாது என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. உங்களுக்கு நினைவூட்டுவதற்காக, டிக்டாக்கிலிருந்து பகிரப்பட்ட வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் கீழே காணக்கூடிய வாட்டர் மார்க் அடையாளத்தைக் கொண்டிருக்கும்.
டிக்டாக் வாட்டர்மார்க்
எனவே இப்போது இன்ஸ்டாகிராம் அதன் வழிமுறையில் மாற்றங்களைச் செய்துள்ளது. அதில் பயனர்கள் ரீல்ஸில் பதிவேற்றும் வீடியோவில் டிக்டாக் வாட்டர்மார்க் இருப்பதைக் கண்டறிந்தால், அந்த வீடியோ மற்ற ரீல்ஸ் பயனர்களுக்குப் பரிந்துரைக்காது என்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் கூறியுள்ளது. நிறுவனத்தின் மின்னஞ்சல் அறிக்கையில், இன்ஸ்டாகிராம் செய்தித் தொடர்பாளர் தேவி நரசிம்மன் கூறியிருந்ததைப் பார்க்கலாம்.
ரீல்ஸ் டேப்பில் டிக்டாக் இருக்க கூடாது
ரீல்ஸ் டேப் போன்ற இடங்களில் வேடிக்கையான மற்றும் பொழுதுபோக்கு வீடியோக்களை பரிந்துரைக்கவும், அனுபவத்தைத் தனிப்பயனாக்கவும், எக்ஸ்ப்ளோரிங் செய்வதற்கும் நாங்கள் பயன்பாட்டை மேம்படுத்தி உருவாக்கி வருகிறோம். தரவரிசை சிக்னல்களைப் பயன்படுத்தி நாங்கள் மக்களுக்குத் தேவைப்படும் ஒரு ரீல்ஸ் பொழுதுபோக்கை நாங்கள் பரிந்துரைக்க வேண்டுமா என்பதைக் கணித்துச் செயல்படுகிறோம், என்று கூறியுள்ளார்.
கூடுதல் வழிகாட்டுதல்களை வெளியிட நிறுவனம்
இன்ஸ்டாகிராம் அதன் படைப்பாளர்களின் கணக்கில் இரண்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது இன்ஸ்டாகிராம் பயனர்களுக்குப் பார்க்கக்கூடிய மற்றும் விளம்பரப்படுத்தக்கூடிய உள்ளடக்கத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான உதவிக்குறிப்புகளை வழங்குகிறது. இன்ஸ்டாகிராம் கூறுகையில், படைப்பாளிகளுக்கு எந்த வீடியோவை எப்படி, எந்தவிதத்தில் கொடுக்க வேண்டும் என்ற அறிவுரையை இது வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக