பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2021-22ஆம் நிதியாண்டில் அரசு தனது கையிருப்பில் இருக்கும் நிறுவன பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை ஈட்டும் Disinvestment இலக்கை கடந்த ஆண்டில் 2.1 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 1.75 லட்சம் கோடி ரூபாயாகக் குறைத்துள்ளது.
இந்நிலையில் இந்த வருட இலக்கை கண்டிப்பாக அடைய வேண்டும் எனத் திட்டமிட்டு உள்ள மத்திய அரசு புதிய நிதியாண்டு துவங்கும் முன்னரே அரசு நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யத் தயாராகியுள்ளது.
மத்திய அரசு திட்டம்
சமீபத்தில் அரசு தரப்பில் இருந்து வெளியான தகவல்கள் படி மத்திய அரசு 2021-22ஆம் நிதியாண்டில் பார்த் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், Mecon லிமிடெட், Andrew Yule ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே இரு பொதுத்துறை வங்கிகள், ஒரு இன்சூரன்ஸ் நிறுவன பங்குகளை விற்பனை செய்யப் பட்ஜெட் அறிக்கையில் முடிவு செய்யப்பட்டு உள்ளது
BHEL நிறுவனம்
இந்தச் செய்தி BHEL நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது, குறிப்பாக இதானல் தங்களது வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பங்குச்சந்தையில் இருக்கும் BHEL நிறுவனத்தின் பங்குகள் இன்று அதிகப்படியாக 8.50 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
எஸ்பிஐ கேப்பிடல் மார்கெட்ஸ்
எஸ்பிஐ கேப்பிடல் மார்கெட்ஸ் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் அரசு பங்குகளை விற்பனை செய்யும் பணிகளை மேற்கொள்ளும் DIPAM அமைப்பிற்கு BHEL நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யப் பரிந்துரை செய்தது.
இந்தியாவின் மிகப்பெரிய மின்சார உபகரணம் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசின் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கும் நிலையில் இந்நிறுவனப் பங்குகள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
3 நிறுவனங்கள்
இதேபோல் எஸ்பிஐ கேப்பிடல் மார்கெட்ஸ் நிறுவனம் Mecon லிமிடெட், Andrew Yule ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யப் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. BHEL மற்றும் Andrew Yule ஆகிய நிறுவனங்கள் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் பிரிவில் இருக்கும் நிலையில் Mecon ஸ்டீல் துறையில் உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக