Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

ஒற்றை பெண்ணுக்காக முழு வேகத்தில் இயங்கிய ரயில்... வடகிழக்கு ரயில்வேதுறையின் சபாஷ் செயல்... என்ன தெரியுமா?

ஒற்றை பெண்ணுக்காக முழு வேகத்தில் இயங்கிய ரயில்... வடகிழக்கு ரயில்வேதுறையின் சபாஷ் செயல்... என்ன தெரியுமா?

தன் தங்கையின் நிலையைப் பற்றி டுவிட்டரில் பதிவிட்ட பத்தே நிமிடங்களில் இந்திய ரயில்வேத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றது. உபி மாநிலத்தில் அரங்கேறிய சுவாரஷ்ய சம்பவம் பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.

உத்தரபிரதேச மாநிலம், மவு எனும் பகுதியைச் சேர்ந்தவர் நஸியா டபாசும் (Nazia Tabassum). இவர் சமீபத்தில் ஆசிரியர் பணிக்கான டிஎல்இடி தேர்விற்காக விண்ணப்பத்திருந்தார். இதற்கான தேர்வு மையம் வாரணாசியில் ஒதுக்கப்பட்டது. தான் சொந்த ஊரில் இருந்து இது வெகு தொலைவு அமைந்திருக்கின்றது என்ற காரணத்தால் ரயில் பயணத்தை மேற்கொண்டு தேர்வு மையத்திற்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

இதனடிப்படையில் சாப்ரா (Chhapra) - வாரணாசி (Varanasi) சிறப்பு இன்டர்சிட்டி ரயிலில் ((05111) அவர் பயணத்தை மேற்கொண்டார். தற்போது நாடு முழுவதும் கடும் பனி பொழிந்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக விடியற் காலை நேரங்களில் கண்ணை மறைக்குமளவிற்கு பனி சூழ்ந்த வண்ணம் இருக்கின்றது. இதனால் பெருவாரியான வட மாநிலங்களில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளது.

இதன்காரணமாக, சாப்ரா-வாரணாசி இன்டர்சிட்டி சிறப்பு ரயிலும் சற்று மெதுவாக பயணிக்க நேர்ந்தது. சுமார் காலை 6.45 மணிக்கு மவு ஜங்க்சன் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் 8.55 மணக்கு உள்ளாகவே வாரணாசியைச் சென்று சேர்ந்து விடும். ஆனால், அன்றைய தினம் (கடந்த புதன்கிழமை) ரயில் சுமார் 2.5 மணி நேரத்திற்கும் அதிகமாக கால தாமதாக சென்றிருக்கின்றது. இதனால், ரயிலில் பயணித்த அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகினர்.

அதில், நஸியா டபாசும் ஒருவர். மதியம் 12 மணியளவில் பரீட்சை நடைபெற இருக்கின்றநிலையில் காலை 8 மணி வரையிலும் அவர் ரயிலிலேயே பயணிக்கும் நிலை ஏற்பட்டது. முன் கூட்டியே கிளம்பியும் பரீட்சையை தவற விட்டுவிடுமோ என்ற அச்சமும், பதற்றமும் அவரை வாட்டி வதைத்த வண்ணம் இருந்திருக்கின்றது.

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே தனது சகோதரர் அன்வர் ஜமால் இடம், "தான் இன்னும் தேர்வு மையத்தைச் சென்று சேரவில்லை ரயிலில்தான் இருக்கின்றேன். இது மிகவும் பொறுமையாகச் சென்றுக் கொண்டிருக்கின்றது" என்று பதற்றத்துடன் கூறியிருக்கின்றார். இதனை அறிந்த ஜமால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்திருக்கின்றார்.

அப்போதே, ரயில்வேத்துறை அமைச்சகத்தை டேக் செய்து தன் தங்கையின் நிலைமையைப் பற்றி ஓர் பதிவை டுவிட்டரில் போட்டிருக்கின்றார். இதற்கு உடனடியாக பதிலளிக்கும் விதமாக வட கிழக்கு ரயில்வே அதிகாரிகள், சாப்ரா-வாரணாசி சிறப்பு இன்டர்சிட்டி ரயிலை முழு வேகத்தில் இயக்க அனுமதித்திருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து ரயில் முழு வீச்சில் இயக்கப்பட்டது. ஆகையால், சுமார் 11 மணிக்குள்ளாகவே வாரணாசி ரயில் நிலையத்தை சிறப்பு இன்டர்சிட்டி ரயில் சென்று சேர்ந்தது. வட கிழக்கு ரயில்வே துறையின் இந்த செயலுக்கு நஸியா டபாசும், அவரது சகோதரரும் தனது நன்றிகளைத் தெரிவித்திருக்கின்றார்.

இதுகுறித்து, ஏஎன்ஐ செய்தி தளத்திடம் அவர் கூறியதாவது, "வாரணாசியில் உள்ள வல்லபா வித்யதீப் பலிகா இன்டெர் கல்லூரியல் 12 மணிக்கு எனக்கு பரீட்சை இருந்தது. ஆனால், ரயில் 2.5 மணி நேரம் கால தாமதத்துடன் சென்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையிலேயே எனது சகோதரரின் உதவியை நான் நாடினேன்" என கூறினார்.

இதற்கிடையில், அன்வர் ஜமால் டுவிட்டர் பதிவைத் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு உள்ளாக வடகிழக்கு ரயில்வேத்துறையின் அதிகாரிகள் சிலர் நஸியாவைத் தொடர்பு கொண்டு, "உரிய நேரத்தில் ரயில் சேருமிடத்தில் சேர்ந்து விடும், கவலைப்படாதீர்கள்" என நஸியாவிற்கு ஆறுதல் கூறியிருக்கின்றனர். கூறியதைப் போலவே அவரை உரிய நேரத்தில் கொண்டு சென்றும் சேர்த்திருக்கின்றனர்.

வடகிழக்கு ரயில்வேத்துறையின் இந்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று அனைத்து ரயில்களையும் உரிய நேரத்தில் சேறும்படி கொண்டு போய் சேர்த்தால் மிகவும் சிறப்பானதாக அமையும் என நெட்டிசன்கள் சிலர் கூறி வருகின்றனர்.

சாப்ரா - வாரணாசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பற்றிய சிறப்பு தகவல்:

15111 என்ற எண்ணில் இயங்கும் சாப்ரா - வாரணாசி சிறப்பு இன்டர்சிட்டி ரயில் ஓர் முன்பதிவு ரயில் சேவையாகும். சாப்ரா சந்திப்புக்கும் வாரணாசி நகரத்திற்கும் இடையில் இயங்கி வரும் ஓர் மிக முக்கியமான ரயிலும்கூட. இந்த ரயில் மொத்தமாக 225 கி.மீ தூரம் வரை பயணிக்கும். இதன் சராசரி வேகம் மணிக்கு 43 கி.மீ மட்டுமே ஆகும். இது செல்லும் வழி தடம் ஒட்டுமொத்தமாக 15 நிறுத்தங்களை கொண்டுள்ளது. இது ஓர் தினசரி ரயில் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக