![]()
நடிகர்கள்:
கவுதம் மேனன்,அமலா பால்,விஜய் சேதுபதி
இயக்கம்: கவுதம் மேனன்,ஏஎல் விஜய்,வெங்கட் பிரபு,நலன் குமாரசாமிசினிமா வகை:Drama, Romanceகால அளவு:2 Hrs 12 Min
ஒரு ஆணும், பெண்ணும் நண்பர்களாக மட்டுமே இருக்க முடியுமா?. இது தான் கவுதம் மேனனின் எதிர்பாரா முத்தத்தின் கதை. திருச்சியில் இருக்கும் கல்லூரியில் படிக்கும் ஆதியும்(வினோத் கிஷன்), மிர்ணாளினியும்(அமலா பால்) நல்ல நண்பர்கள் என்பதை காட்டி கதை துவங்குகிறது. பல ஆண்டுகள் கழித்து ஆதி(தற்போது கவுதம் மேனன்) தன் நண்பர்கள் மற்றும் மனைவியிடம் மிர்ணாளினிக்கு மதிய விருந்து கொடுத்து அது முத்தத்தில் முடிந்தது பற்றி கூறுகிறார்.
தற்போது
திருமணமாகி, வெளிநாட்டில் செட்டிலான மிர்ணாளினி ஆதியை சந்தித்தால் என்ன நடக்கும்?.
காதல் கதையை ரசிகர்களை உருக வைக்கும்படி சொல்வதில் கவுதம் வல்லவர். அதை தான்
எதிர்பாரா முத்தத்திலும் செய்திருக்கிறார். அமலா பாலின் நடிப்பு அருமை.
ஏ.எல். விஜய்யின் அவனும் நானும் கதையில் கல்லூரி மாணவியான ப்ரீத்தி(மேகா ஆகாஷ்)
தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டு அதை காதலர் விக்ரமிடம் (அமிதாஷ் பிரதான்)
கூறுகிறார். அதன் பிறகு விக்ரமை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. கருவை
கலைக்குமாறு தோழி ஸ்ருதி(அய்ரா) வலியுறுத்த ப்ரீத்தி என்ன முடிவு செய்கிறார்
என்பதை அழகாக காண்பித்திருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் லோகம் கதையில் வீடியோ கேம் பிளேயரான வருண் சக
பிளேயர் மீது காதலில் விழுந்து அவரை தேடுகிறார். இந்த ஆந்தாலஜியில் லோகம் தான்
ரசிகர்களை கவரவில்லை. கதாபாத்திரங்கள் முதல் அனைத்தும் சுமார் ரகமே.
நலம் குமாரசாமியின் ஆடல் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. தன்
கணவர்(விஜய் சேதுபதி) தனக்கு துரோகம் செய்வதை கண்டுபிடித்துவிடுகிறார் மனைவி(அருவி
புகழ் அதிதி பாலன்). அதன் பிறகு அவர்களின் திருமண வாழ்க்கையில் சிக்கல்
ஏற்படுகிறது. விஜய் சேதுபதியும், அதிதி பாலனும் அருமையாக நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி தன் அபார நடிப்பால் கைதட்டல்கள்
வாங்குகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக