விவாசாயிகள் போராட்டத்தை தூண்டி விடும் வகையிலான பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுடன் தொடர்புள்ள 1178 டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திடம் அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் விவாசாயிகள் போராட்டத்தை தூண்டி விடும் வகையிலான பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுடன் தொடர்புள்ள 1178 டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திடம் அரசு கூறியுள்ளது. விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி, அதன் மூலம் விவாசாயிகள் போராட்டத்தை (Farmers Protest), இந்த கணக்குகள் வேலை செய்வதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது.
போலி செய்திகளை பரப்பியது தொடர்பாக, குறிப்பிட்ட 1178 டுவிட்டர் கணக்குகளின் பட்டியலை டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுப்பியது.
விவசாயிகள் போராட்டத்தை தூண்டும் வகையில், தவறான தகவல்களை வேண்டுமென்றே பதிவிட்டு ட்வீட் செய்து, சட்ட ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்த கணக்குகள் செயல்பட்டன என்றும் ட்விட்டர் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் (Central Government) நோட்டீஸ் குறித்து கருத்து தெரிவித்த ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் , "ட்விட்டர் (Twitter) நிறுவனத்தின் ஊழியர்களின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம். தொடர்ந்து அரசுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். இது தொடர்பாக மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் நேரம் கோரியுள்ளோம். அதே நேரம் அனைவரது கருத்துச் சுதந்திரத்தையும் நாங்கள் முழுவதுமாக மதிக்கிறோம்" என்று கூறினார்.
அரசின் நோட்டீஸ் தொடர்பாகத் தீவிரமாக விசாரணை நடத்திய பிறகு, அதற்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இது வரை ட்விட்டர் நிறுவனம், கணக்குகளை முடக்குவது தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக