Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 10 பிப்ரவரி, 2021

இரண்டு மணி நேரம் ஆன்லைன் வகுப்பு எடுத்த ஆசிரியர்: கடைசியில் மாணவன் சொன்ன ஒரு வார்த்தை: நொறுங்கி போன ஆசிரியர்.!

 பேராசிரியர் டாங் வாங்

கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தோன்றி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக உலகம் முழுவதும் 10,70,79,812 பேரை தாக்கியுள்ளதாகவும், சுமார் 23 லட்சம் பேர் வரை இந்த வைரஸ்-க்கு பலியாகியுள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது

கொரோனா வைரஸ்

மேலும் இந்த கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்துதான் பரவியதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றும் சாட்டியிருந்தார். குறிப்பாக இந்த நோய் தொற்றின் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக, பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகம் தொடர்பான சந்திப்புகள் அனைத்தும் ஆன்லைன் வீடியோ கால்கள் மூலமாக நடைபெற்று வருகின்றன.

அதேசமயம் உலகம் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் அதிகம் நடைபெறுவதால், இதில் நகைச்சுவை அல்லது தவறுகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக இந்த காலக்கட்டங்களில் வைரலாகி வருகின்றன.

பேராசிரியர் டாங் வாங்

அதேபோல் சிங்கப்பூரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்களுக்கான வகுப்பு ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்துள்ளது. இந்த வகுப்பை கணித பேராசிரியர் டாங் வாங் என்பவர் நடத்தி வந்துள்ளார்.

வகுப்பை முடித்துக் கொள்ளலாமா?

அண்மையில் பேராசிரியர் டாங் வாங் இரண்டு மணி நேரம் வகுப்பு எடுத்த பிறகு மாணவர்களிடம் ஏதேனும் சந்தேகம் உள்ளதா என்று கேட்டுள்ளார். யாரும் பதிலளிக்காத நிலையில் அப்போது வகுப்பை முடித்துக் கொள்ளலாமா? என்று கேட்டுள்ளார். அந்த சமயம் சில மாணவர்கள் அவரிடம் நீங்கள் எடுத்த வகுப்பு 6.08 மணி வரை மட்டுமே கேட்டது என்றும், அதன்பிறகு எதுவும் சுத்தமாக கேட்டவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அதாவது ஆறு மணிக்கு வகுப்பு ஆரம்பித்த நிலையில், சுமார் 8 மணி வரை டாங் வாங் எடுத்துள்ளார். இதனால் மிகவும் வருத்தம் அடைந்த டாங் வாங் இரண்டு மணி நேரம் எடுத்த வகுப்பு வீணாய் போனதே என்று வேதனையடைந்தார். கடைசியில் பிறகொரு நாள் மீண்டும் இந்த வகுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

பலமுறை முயற்சிகளை மேற்கொண்டோம்

மேலும் இந்த சம்பவம் குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், ஆசரியர் ஆறு மணிக்கு வகுப்பு ஆரம்பித்த நிலையில்,அடுத்த சில நமிடங்களிலேயே அவர் தனது அழைப்பை தெரியாமல் mute செய்துள்ளார். ஆனாலும் இதனை தெரியப்படுத்த பலமுறை முயற்சிகளை மேற்கொண்டோம், அவரது எண்ணிற்கு அழைத்த போது அழைப்பையும் அவர் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக