Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 18 பிப்ரவரி, 2021

Car Insurance: இனி நொடியில் ஆகும் வேலை, வந்து விட்டது Automated vehicle inspection

Car Insurance: இனி நொடியில் ஆகும் வேலை, வந்து விட்டது Automated vehicle inspection

காப்பீட்டாளருக்கு தானியங்கி வாகன ஆய்வு வசதியை வழங்க லிபர்ட்டி சிட்டிஸ்டேட் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட், எனாம் செக்யூரிட்டீஸ் மற்றும் டயமண்ட் டீல்ட்ரேட் இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

காப்பீட்டு நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு தங்களின் பாலிசிகளை விற்பனை செய்வதற்காக பல வகையான சலுகைகளை அளிக்கின்றன. ஆனால் ஒரு பாலிசியை கிளெய்ம் செய்யும் நேரம் வரும்போதுதான் சில நிறுவனங்களின் உண்மையான நிலை தெரிகிறது.

தங்கள் பணத்தைப் பெற வாடிக்கையாளர்கள் பல முறை சுற்றி அலைய வேண்டி இருக்கிறது. இந்த தொல்லைகள் லிபர்ட்டி ஜெனரல் இன்சூரன்ஸ் மூலம் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளன.

தானியங்கி வாகன ஆய்வு சேவை என்றால் என்ன

செயற்கை நுண்ணறிவு ஆய்வு செயல்முறையின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் கார் பாலிசியை (Policy) புதுப்பித்து, கிளெய்ம் செட்டில்மெண்டைப் பெற தங்கள் காரின் புகைப்படம் எடுத்து வீடியோவை உருவாக்க வேண்டும். இதற்குப் பிறகு, பாலிசிதாரர் புகைப்படத்தையும் வீடியோவையும் நிறுவனத்தின் மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்ப வேண்டும்.

நிறுவனம் மின்னஞ்சலைப் பெற்றவுடன் உங்கள் வாகனத்தின் தானியங்கி ஆய்வு அறிக்கை மற்றும் க்ளெயிம் செட்டில்மெண்ட் அறிக்கை தயாரிக்கும் செயல்முறை தொடங்கப்படும். சில நாட்களில், உங்கள் வீட்டிலிருந்தபடியே தானியங்கி ஆய்வு அறிக்கை உங்களுக்கு கிடைக்கும்.

வீட்டிலிருந்தபடியே காப்பீட்டுக் கொள்கையைப் புதுப்பிக்கவும்

பாலிசியைப் புதுப்பிப்பதிலும் தானியங்கி வாகன ஆய்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக, பாலிசியைப் புதுப்பிக்கும் நேரத்தில் வாகனத்தின் சமீபத்திய நிலை சரிபார்க்கப்படுகிறது. காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் வாகனத்தை சரிபார்க்கிறார்கள். இந்த முழு செயல்முறையிலும் அதிக நேரம் ஆகும். ஆனால் தானியங்கி வாகன ஆய்வு சேவை மூலம், உங்கள் பாலிசியை (Insurance Policy) எந்த பிரச்சனையும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே புதுப்பிக்கலாம்.

உங்கள் பணி விரைவாக முடிக்கப்படும்

லிபர்ட்டி ஜெனரல் இன்சூரன்சின் படி, கார் ஆய்வு செயல்முறையை தானியக்கமாக்குவதற்கான பணிகள் 2 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. காப்பீட்டாளருக்கு தானியங்கி வாகன ஆய்வு வசதியை வழங்க லிபர்ட்டி சிட்டிஸ்டேட் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட், எனாம் செக்யூரிட்டீஸ் மற்றும் டயமண்ட் டீல்ட்ரேட் இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம், வாடிக்கையாளர் மற்றும் நிறுவனத்தின் நேரம், செலவு மற்றும் காகிதப்பணி ஆகியவை பெரும் அளவில் குறைகின்றன. டிஜிட்டல் இந்தியாவின் (Digital India) சகாப்தத்தில் தானியங்கி வாகன ஆய்வு மிகவும் பயனுள்ளதாக இருந்து நன்மை பயக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக