
பிஎஃப் வட்டி விகிதத்தைக் குறைக்க ஆலோசனை நடைபெறுவதாகத்
தகவல் வெளியாகியுள்ளது
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து
சிறப்பு வசதியின் கீழ் பிஎஃப் பணத்தை எடுக்க வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அதிகப்பேர் பிஎஃப் பணத்தை எடுத்துப் பயன்படுத்தினர். இக்காலத்தில் பிஎஃப்
பங்களிப்புத் தொகையும் குறைந்தது. இதனால் பிஎஃப் வட்டி விகிதத்தைக்
குறைக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய வாரிய உறுப்பினர்கள் இதுகுறித்து
மார்ச் 4ஆம் தேதி ஆலோசனை செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பிஎஃப் வட்டி
குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இது 6 கோடிக்கும் மேற்பட்ட பிஎஃப் சந்தாதார்களுக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 2020 நிதியாண்டில் பிஎஃப் வாயிலான வருவாய் குறைவாக இருந்தது.
அந்த ஆண்டில் பிஎஃப் வட்டி விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது. இது கடந்த 7 ஆண்டுகளில்
மிகக் குறைந்த வட்டியாகும்.
2013 நிதியாண்டில் பிஎஃப் வட்டி விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது. 2019 நிதியாண்டில்
கூட 8.65 சதவீத வட்டி கிடைத்தது. 2020 நிதியாண்டில் கேஒய்சி தாமதம் காரணமாக பிஎஃப்
வட்டி கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் 6 கோடிக்கும் மேற்பட்ட பிஎஃப் சந்தாதார்கள்
அதிருப்தியடைந்தனர். இந்நிலையில், பிஎஃப் வட்டி மேலும் குறைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால்
கவலையில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா வந்த பிறகு கடுமையான நிதி நெருக்கடி நிலவும் சூழலில்
பிஎஃப் வட்டியைக் குறைத்தால் மேலும் நெருக்கடி ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக