Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 18 பிப்ரவரி, 2021

இந்த லேட்டஸ்ட் Micromax போனை வாங்குனவங்க.. வெரி லக்கி; ஏனென்றால்?

 

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அதன் இன் 1பி ஸ்மார்ட்போனுக்கு புதிய OTA OS அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் IN 1b பயனர்களுக்கு ஸ்லோ மோ வீடியோ உட்பட பல அம்சங்களை கொண்டு வருகிறது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான IN 1b மாடல் 2021 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய செக்யூரிட்டி பேட்ச் உடன் புதிய அம்சங்களைக் கொண்டுவரும் புதிய சாப்ட்வேர் அப்டேட்டையும் பெறத் தொடங்கியுள்ளது. இந்த லேட்டஸ்ட் அப்டேட் குறிப்பாக சிஸ்டம் லெவல் மேம்பாடுகளுடன் கேமரா மேம்படுத்தல்களிலும் கவனம் செலுத்துகிறது.

மைக்ரோமேக்ஸ் வெளியிட்டுள்ள இந்த புதிய அப்டேட்டில் முன் மற்றும் பின்புற கேமராக்களுக்கான ஸ்லோ-மோ வீடியோ செயல்பாடு, மேம்பட்ட ஒலியியல் செயல்திறன் மற்றும் மிகவும் மென்மையான அனுபவத்திற்கான சில சிஸ்டம் மேம்பாடுகள் உள்ளன.

மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

மைக்ரோமேக்ஸ் 1B ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் அளவிலான எச்டி + டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது 2 ஜிபி அல்லது 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அல்லது 64 ஜிபி சேமிப்பகத்துடன் ஜோடியாக மீடியாடெக் ஹீலியோ ஜி 35 மூலம் இயங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஓஎஸ் (2 வருட ஓஎஸ் அப்டேட் உத்தரவாதத்துடன்) மூலம் இயங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இது 13MP முதன்மை கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் என்கிற டூயல் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்களுக்காக 8 எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போனின் மொத்த அமைப்பும் ஒரு 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 10W சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் ஆதரிக்கப்படுகிறது.

மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போனின் விலை:

மைக்ரோமேக்ஸ் இன் 1 பி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ்.காம் வழியாக ரூ.6,999 க்கும் (6 ஜிபி 2 ஜிபி ரேம் + 32 ஜிபி) மற்றும் ரூ.7,999 க்கும் (4 ஜிபி ரேம் + 64 ஜிபி) வாங்க கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக