வாட்ஸ்அப் செயலியில் விரைவில் logout அம்சம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அம்சத்தில் கிடைக்கும் பயன் உள்ளிட்டவைகள் குறித்து பார்க்கலாம்.
பிரதான பயன்பாடாக இருப்பது வாட்ஸ்அப்
சமூகவலைதள பயன்பாடுகளில் பிரதான ஒன்றாக இருப்பது வாட்ஸ்ஆப். வாட்ஸ்அப் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. பல்வேறு தேவைகளுக்கு வாட்ஸ்ஆப் பயன்பாடு என்பது பிரதானமாக இருந்து வருகிறது.
புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் சேவை ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில் பிரதான ஒன்றாக இருக்கிறது. குடும்ப நபர்கள், நண்பர்கள் குரூப்பில் தொடங்கி அலுவலக தேவை வரை வாட்ஸ்அப் பயன்பாடு என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது. வாட்ஸ்அப் செயலியும் தங்களது பயனர்கள் தேவையை பூர்த்தி செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
திடீரென வாட்ஸ்அப் மெசேஜை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றாலும் வாட்ஸ்அப்பில் இருந்து சிறிது காலம் விடுபட்டு இருக்க வேண்டும் என்றாலும் ஒரேவழி டெலிட் அக்கவுண்ட் தேர்வுதான். அப்படி டெலிட் அக்கவுண்ட் தேர்வை கிளிக் செய்தால் மீண்டும் வாட்ஸ்அப்பை நிருவுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜை தேவைப்பட்ட கால அவகாசம் வரை நிறுத்தி வைப்பதற்கு ஒரு சரியான வழி இல்லாமல் இருந்தது. இதை முடிவு கட்டும் வகையில் வாட்ஸ்அப் புது அம்சம் ஒன்றை கொண்டு வர உள்ளது.
விரைவில் LogOut அம்சம்
WeBetaInfo-ன் புதிய அறிக்கைப்படி வாட்ஸ்அப் விரைவில் LogOut அம்சம் அறிமுகம் செய்யப்போகிறது. இந்த புதிய லாக்அவுட் அம்சம் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது. தேவையில்லாத போது லாக்அவுட் செய்து தேவையானபோது லாக்இன் செய்யலாம். இந்த ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்பில் விரைவில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக