Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

அடுத்த சில நாட்களில் உங்க WhatsApp-ல ஒரு பேனர் தோன்றும்; ஏன்? எதற்காக?

 

ஸ்டேட்டஸ் வழியாக கொடுத்த விளக்கத்தை தொடர்ந்து, வாட்ஸ்அப் அதன் தனியுரிமைக் கொள்கை குறித்த கூடுதல் தகவல்களை வழங்க வரும் வாரங்களில் பேனரைக் காண்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பயனர்களின் தனிப்பட்ட மெசேஜ்களை தாய் நிறுவனமான பேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்கிறது என்கிற காரணத்தினால் பெரிய அளவிலான எதிர்ப்பை மற்றும் வெறுப்பை சம்பாதித்த வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கைகள் "விளக்கம்" என்கிற பெயரில் மீண்டும் காட்சிப்படுத்தப்படப்படவுள்ளது.

அதாவது, வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு நிறுவனத்தின் புதிய தனியுரிமைக் கொள்கையைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க பேனர்களை காட்சிப்படுத்த உள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் அதன் “அப்டேடட் பிளான்களை" விளக்கும் ஒரு புதிய வலைப்பதிவு இடுகையை (பிளாக் போஸ்ட்டை) வெளியிட்டுள்ளது. அதன் வழியாக நிறுவனத்தின் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை பயனர்கள் எவ்வாறு மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் "இந்த அப்டேட்டைப் பற்றி நாங்கள் முன்னர் ஏராளமான தவறான தகவல்களைச் சந்தித்தோம், மேலும் எந்தவொரு குழப்பத்தையும் நீக்குவதற்கு நாங்கள் தொடர்ந்து கடுமையாக உழைக்கிறோம்" என்றும் அந்த பிளாக் போஸ்டில், வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியுள்ளது

மேலும் வரும் வாரங்களில் வெளியிடப்படும் பேனர் அம்சம், வாட்ஸ்அப் தளத்தின் புதிய தனியுரிமைக் கொள்கைகளை மீண்டும் பார்க்க பயனர்களை அனுமதிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெரியாதவர்களுக்கு, வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை புதுப்பிப்பதாக கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் அறிவித்தது மற்றும் அதற்கான "கெடு நாளாக" பிப்ரவரி 8 ஆம் தேதியையும் நிர்ணயம் செய்ததது மற்றும் புதிய கொள்கைகளுக்கு இணங்குமாறு பயனர்களை கட்டாயப்படுத்தியது.

இணைங்கவில்லை என்றால் குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு விதிமுறைகளை ஏற்காத பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டிற்கான அணுகலை இழக்க நேரிடும் என்று வாட்ஸ்அப் எச்சரித்து இருந்தது.

பயனர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதும், புதிய வாட்ஸ்அப் பாலிசியின் காலக்கெடு மே 15 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் பயனர்களிடம் இருக்கும் குழப்பத்தை நீக்க வாட்ஸ்அப் பல வலைப்பதிவு இடுகைகளை வெளியிட்டு வருகிறது.

நினைவூட்டும் வண்ணம், முன்னதாகா வாட்ஸ்அப் அதன் புதிய தனியுரிமைக் கொள்கை குறித்த தகவல்களை அதன் ஸ்டேட்டஸ் அம்சத்தின் மூலம் வழங்கத் தொடங்கியது.

அடுத்தகட்டமாக வரும் பேனர் அம்சத்தில் “பயனர்களின் கவலைகளை தீர்க்கும் பல கூடுதல் தகவல்கள் இருக்கும்” என்றும் வாட்ஸ்அப் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக