Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 15 மார்ச், 2021

மார்ச் 24 இந்தியாவில் களமிறங்கும் ரியல்மி 8, ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்.!

 மார்ச் 15-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 8, ரியல்மி 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் மார்ச் 24-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக அசத்தலான கேமரா வசதி மற்றும் தனித்துவமான சிப்செட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளிவரும்.

மார்ச் 15-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை

மேலும் ரியல்மி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை மார்ச் 15-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்யலாம். குறிப்பாக இந்த சாதனங்கள் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். இப்போது இந்த சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி 8

ரியல்மி 8 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும். மேலும் சைபர் சில்வர் மற்றும் சைபர் பிளாக் நிறங்களில் இந்த ரியல்மி 8 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ரியல்மி 8 ப்ரோ

அதேபோல் ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு மஞ்சள், கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 8 டிஸ்பிளே

ரியல்மி 8 ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதி உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

ரியல்மி 8 பிராசஸர்

இந்த ரியல்மி 8 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜ95 கேமிங் பிராசஸர் வசதி உள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ரியல்மி 8 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி 8 கேமரா

அதேபோல் ரியல்மி 8 ஸ்மார்ட்போனில் 64எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பு டூயல் எல்இடி பிளாஸ், 32எம்பி செல்பீ கேமரா உட்பட பல்வேறு ஆதரவுகள் இந்த ரியல்மி 8 ஸ்மார்ட்போனில் உள்ளதாக கூறப்படுகிறது.

ரியல்மி 8 பேட்டரி

குறிப்பாக ரியல்மி 8 ஸ்மார்ட்போன் மால் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு கைரேகை சென்சார் வசதி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி 8 ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி 8 ப்ரோ

ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ரியல்மி 8 ப்ரோ கேமரா

இந்த ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ரியல்மி 8 ப்ரோ பேட்டரி

ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் வசதி உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன்.

ரியல்மி 8 ப்ரோ சிப்செட்

ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும், பின்பு கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக செயல்படும் இந்த ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக