டோல்கட் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணிக்க ஜட்ஜ் ஒருவர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை
பயன்படுத்தாத வாகனங்களிடம் இருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அரசு
கூறியிருக்கின்றது. இந்த நிலையில், தான் கட்டணமே செலுத்த தயாராக இல்லை என கூறும்
கூடுதல் மாவட்ட நீதிபதி பற்றிய தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.
சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை பல அரசியல் கட்சித் தலைவர்கள் பகல் கொள்ளை என வர்ணித்து வருகின்றனர். இதே கருத்தைக் கொண்டிருக்கும் பலர் விருப்பம் இல்லையென்றாலும் டோல்கேட்டிற்கான கட்டணத்தைச் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக ஏழை, எளிய மக்கள் வேறு வழியின்றி ஒவ்வொரு முறையும் டோல்கேட்டுகளைக் கடக்கையில் அதற்கான கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.
அதேசமயம், இக்கட்டணத்தில் இருந்து விளக்கு பெற ஒரு சிலர் கடும் வாக்குவாதங்களையும், சண்டைகளையும் டோல் ஊழியர்களிடத்தில் மேற்கொள்வதையும் நம்மால் காண முடிகின்றனது. அவ்வாறு, வார்த்தை போரில் ஈடுபடுவோர் பெரும்பாலானோர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களாகவும், அரசுத் துறையில் பணியாற்றுபவர்களுமாகவே இருக்கின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஓர் புதிய சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. டோல்கேட் ஊழியர்களிடத்தில் தான் ஒரு கூடுதல் மாவட்ட நீதிபதி என்றும், என்னைக் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மாருதி சுசுகி காரில் வந்த அந்நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது.
முன்னதாக, காருக்குள் அமர்ந்தபடியே காரின் ஓட்டுநர் அவரது அடையாள அட்டையக் காண்பிக்க, "இந்த பொருப்பில் இருப்பவர்கள் இலவசமாக டோல்கேட்டைக் கடக்க அனுமதி இல்லை" என சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியிருக்கின்றனர். இதற்கு டோல்கேட் மேற்பார்வையாளரை வருமாறு அழைத்த மாவட்ட நீதிபதி, அவரிடத்தில் சில மணி நேரம் வாதிட்டார். இருப்பினும், அவரும் அதே பதிலைக் கூற, இதெல்லாம் சரிபட்டு வராது என கூறி, மேனஜரை வருமாறு அவர் அழைத்தார்.
ஆனால், அவரும் முன்னதாக பணியாளர்கள் கூறிய அதே பதிலைக் கூறியிருக்கின்றார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமே இலவசமாக கடக்க அனுமதி உண்டு. கூடுதல் மாவட்ட நீதிபதிகள் இலவசமாக கடக்க அனுமதி இல்லை என கூறினார். இதனால், கடுப்பான நீதிபதி ரூ. 80 கட்டணத்தைச் செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருக்கின்றார்.
இந்த வாக்குவாதம் நீண்ட நேரம் ஏற்பட்டதால் நீதிபதின் காருக்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்த பிற வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இலவசமாகக் கடக்க வேண்டும் என நீதிபதி வாதிட்டு வந்தால் சில நேரங்கள் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது. இருப்பினும், அவர் டோல்கேட்டிற்கான கட்டணத்தைச் செலுத்தியே அங்கிருந்து புறப்பட்டார்.
தங்களால் இயலாத சூழ்நிலையிலும் நமக்கு ஏன் வம்பு என பராமரிப்பற்ற சாலைகளுக்கும் பலர் டோல் செலுத்திவிட்டு கடந்து வருகின்றனர். ஆனால், ஒரு சில முக்கிய பிரமுகர்கள் இலவசமாக டோலைக் கடக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று வாக்குவாதத்திலும், சில நேரங்களில் மோதலிலும் ஈடுபடுவதுண்டு.
அந்தவகையிலேயே உபி மாநிலத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி மேற்கொண்ட செயல் அமைந்திருக்கின்றது. நீதிபதியின் இச்செயல் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக