Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 15 மார்ச், 2021

அவசியமான கண்டுபிடிப்பு: "ஆட்டிசம் குழந்தைகள்"- குறைபாட்டை முன்கூட்டியே கண்டறியும் பிரத்யேக கருவி!

 ஆட்டிசம் குறைபாடுகளை கண்டறியும் பிரத்யேக கருவி

ஆட்டிசம் குறைபாடுகள் குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆட்டிசம் குறைபாடு என்பது குழந்தையின் மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாடாகும். பெற்றோர்களின் முறையான கவனிப்பின் மூலமாக இந்த குழந்தைகளை மிகப் பெரிய திறமைசாலியாக மாற்றமுடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆட்டிசம் குறைபாடு

ஆட்டிசம் குறைபாடு எந்த காரணத்திற்கு ஏற்படுகிறது என கண்டறியப்படாத சூழிலில் இந்த குறைபாடு உள்ள குழந்தைகள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அதீத திறனுடன் இருப்பார்கள் என கூறப்படுகிறது. பெற்றோர்களின் முறையான பயிற்சி மூலம் இந்த குழந்தைகளை திறமைவாய்ந்தவர்களாக மாற்றலாம்.

ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள்

ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள் சற்று மாறுபட்ட நிலையில் காணப்படுவார்கள். கட்டுபாடின்றி காணப்படும் இந்த குழந்தைகள் மிக ஆக்டிவ் ஆக காணப்படுவார்கள். இவர்களின் முறையான திறமைகளை கண்டறிந்து பயிற்சி வளங்கப்படும் பட்சத்தில் அதில் மற்றவர்களைவிட மிகச் சிறந்து விளங்குவார்கள் இந்த குழந்தைகள்.

ஆட்டிசம் குறைபாடுகளை கண்டறியும் பிரத்யேக கருவி

இந்த நிலையில் குழந்தைகளுக்கு வரும் ஆட்டிசம் குறைபாடுகளை கண்டறியும் பிரத்யேக கருவியை ஹாங்காங் விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். கண் விழித்திரை மூலம் ஸ்கேன் செய்து குழந்தைகள் ஆட்டிசம் குறைபாடுகளை ஆரம்பக் காலங்களிலேயே குணப்படுத்த முடியும்.

கண் விழிகளை ஸ்கேன் செய்து கண்டறியலாம்

ஹாங்காங்கை சேர்ந்த சீன பல்கலைக்கழக பேராசிரியர் பென்னி ஜீ, இவர் குழந்தைகளின் ஆட்டிச குறைபாடுகளை ஆரம்பக்கட்டத்திலேயே கண் விழிகளை ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவி சிறந்த முறையில் தயாராகி வருவதாகவும் விரைவில் இது முழு வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகளுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கருவிகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வு

மேலும் 13 வயதுக்குட்பட்ட ஆட்டிசம் குறைபாடுகள் பாதிக்கப்பட்ட 46 குழந்தைகள் உட்பட 70 குழந்தைகளை இந்த கருவி மூலம் ஸ்கேன் செய்ததாகவும், இதன்மூலம் ஆய்வு செய்ததில் 95.7 சதவீத பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளை கண்டறிய முடிந்ததாகவும் பென்னி ஜீ கூறினார்.

அதிக தெளிவுத்திறன் உடன் கூடிய கேமரா

இந்த கருவியான கண்விழிகளை ஸ்கேன் செய்து அதன்மூலம் குழந்தைகளின் ஆட்டிச குறைபாடுகளை கண்டறியமுடியும் எனவும் அதிக தெளிவுத்திறனுடன் கூடிய கேமரா, அதிநவீன கணினி மூலம் கண் விழிகளை ஸ்கேன் செய்து ஆட்டிசம் குறைபாடுகளை கண்டறிய முடியும் எனவும் இதன்மூலம் பிரத்யேக சிகிச்சை அளிக்க முடியும் என பென்னி ஜீ தெரிவித்தார்.

ஆரம்பத்திலேயே குறைபாடுகளை கண்டறியலாம்

கண் விழித்திரை ஸ்கேனிங் மூலம் குழந்தைகளுக்கான ஆரம்பகால குறைபாடுகளை கண்டறிந்து, சிகிச்சை விளைவுகளை மேபடுத்த முடியும் எனவும் இதன் முக்கியத்துவம் வளர்ந்து வருவதாகவும் பென்னி கூறினார். புதிய கணினி மென்பொருள் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா, ஃபைபர் அடுக்குகள் ஆகியவை கண்ணில் உள்ள ரத்தநாளங்கள் உள்ளிட்ட காரணிகளை பகுப்பாய்வு செய்ய முடியும் என கூறப்படுகிறது.

விரைவில் உகந்த சிகிச்சை அளிக்கலாம்

ஆட்டிசம் அபாயத்தில் உள்ள குழந்தைகளை அடையாளம் காணமுடியும் எனவும் விரைவில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் எனவும் பென்னி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக