Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 15 மார்ச், 2021

மும்பையைச் சேர்ந்த கணினி ஆசிரியர் உருவாக்கிய ஷாலு ரோபோ: இதன் சிறப்பம்சம் என்ன?

மும்பையைச் சேர்ந்த கணினி ஆசிரியர்

இந்த உலகில் இயந்திரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது, குறிப்பாக இந்த தேவைகளை பூர்த்தி செய்ய ரோபோக்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. எனவே அவ்வாறு உருவாக்கப்படும் ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்படுகின்றன.

மும்பையைச் சேர்ந்த கணினி ஆசிரியர்

இந்த நிலையில் 47 மொழிகளில் பேசும் மனித வடிவிலான புதிய ரோபோ ஒன்றை உருவாக்கி மும்பையைச் சேர்ந்த கணினி ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.

ஷாலு என்ற மனித வடிவிலான ரோபோ

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, மும்பையைச் சேர்ந்த தினேஷ் பட்டேல் என்ற அசிரியர், பிளாஸ்டிக், அட்டைப்பெட்டி, மரக்கட்டை போன்ற பொருட்களை வைத்து, ஷாலு என்ற மனித வடிவிலான ரோபோவை உருவாக்கியுள்ளார்.

50 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு

மேலும் தினேஷ் பட்டேல் கூறியது என்னவென்றால், ஷாலு ரோபோவை உருவாக்க 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்ததாகவும், பின்பு இதை உருவாக்க 3 வருடங்கள் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய ஷாலு ரோபோன ஆனது தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உட்பட இந்திய மொழிகளிலும், உலக அளவில் 38 மொழிகளிலும் பேசும் திறன் கொண்டது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ரோபோ நாம் கேட்கும் பொது அறிவு சார்ந்த கேள்விகளுக்கும் பதிலளிக்கும் என்று கூறப்படுகிறது

குறிப்பாக இந்த புதிய வகை ரோபோவை பள்ளிகளில் ஆசிரியாராகவும் பயன்படுத்தலாம் என்று தினேஷ் பட்டேல் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் உலகில் பல சிறப்பம்சங்கள் கொண்ட ரோபோக்கள் உள்ளன. மேலும் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடத்திலும் ரோபோக்கள் நமக்கு பெரும் பயன்களை கொடுத்து வருகின்றன. நாம் வளர்க்கும் செடிகொடிகள், புல்வெளிகளை கவனிப்பது, ஜன்னல்களை சுத்தம் செய்வது, மற்றும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது என பலவிதமான சிறிய வகை ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய வகை ரோபோக்கள் மூலம் ஆபத்தாக இருக்கும் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக