Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 15 மார்ச், 2021

6.51-இன்ச் எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

 வைல்டுஃபயர் இ3

எச்டிசி நிறுவனம் தனது புதிய எச்டிசி வைல்டுஃபயர் இ3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை ரஷ்ய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைல்டுஃபயர் இ3

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது இந்த புதிய வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன். இப்போது வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விரிவாகப் பார்ப்போம்.

720 x 1560 பிக்சல் தீர்மானம்

எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் ஐபிஎஸ் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1560 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது எச்டிசி வைல்டுஃபயர் இ3.

ஹீலியோ பி22 சிப்செட்

எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன் மாடலில் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

13எம்பி பிரைமரி லென்ஸ்

எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 13எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4000 எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வெளிவந்துள்ளது எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன். குறிப்பாக 1080 பிக்சல் வீடியோ பதிவு ஆதரவு, கைரேகை சென்சார்,ஃபேஸ்அன்லாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இரட்டை சிம் ஆதரவு, 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் 4.2, யூ.எஸ்.பி-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக்,மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.13,000-ஆக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!