Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 17 மார்ச், 2021

ரூ.999 விலையில் pTron Bassbuds Jets வாங்கலாம்.. எப்படி..? எங்கே வாங்கலாம் என்று தெரியுமா?

pTron ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்

pTron நிறுவனம் 16ம் தேதியான நேற்று இந்தியச் சந்தையில் நம்ப முடியாத விலையில் புதிய ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. pTron நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளதை புதிய ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் சாதனத்திற்கு பிட்ரோன் பாஸ்பட்ஸ் ஜெட்ஸ் (pTron Bassbuds Jets) என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய pTron பாஸ்பட்ஸ் ஜெட்ஸ் இயர்பட்ஸ் சாதனம் நம்ப முடியாத வகையில் வெறும் ரூ.999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

pTron ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்

pTron நிறுவனம் கடந்த சில காலமாகவே அருமையான பல புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியச் சந்தையில் பட்ஜெட் விலை கேட்ஜெட்ஸ் மற்றும் மலிவு விலை கேட்ஜெட்ஸ்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை உணர்ந்த நிறுவனம், இப்போது மலிவு விலையில் நம்ப முடியாத வகையில் வெறும் ரூ.999 விலையில் ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்து அசதியுள்ளது.

மலிவு விலையில் தரமான ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் அனுபம்

வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்போன்ஸ் மற்றும் நெக்பேண்ட் இயர்போன்ஸ் மீதான ஆர்வம் குறைந்த, மக்கள் இப்போது ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸை வாங்கவே கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இவற்றின் விலை மற்ற வயர்லெஸ் சாதனங்களை விடச் சற்று அதிகம் என்பதனால் மக்களால் இவற்றை வாங்கி பயனடைய முடியவில்லை. இதைச் சரி செய்து, அனைவருக்கும் ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் அனுபவத்தை வழங்கவே நிறுவனம் இப்படி ஒரு விலையில் இந்த சாதனத்தை அறிமுகம் செய்துள்ளதாக pTron நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அமீன் குவாஜா தெரிவித்துள்ளார்.

வெறும் ரூ.999 விலையில் pTron பாஸ்பட்ஸ் ஜெட்ஸ்

புதிய pTron பாஸ்பட்ஸ் ஜெட்ஸ் இயர்பட்ஸ் சாதனம் டேஸ்ழிங் ப்ளூ, ரெவிஷிங் வைட் மற்றும் கிளாஸி பிளாக் நிறங்களில் வெறும் ரூ.999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனம் அமேசான் இந்தியா மூலம் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இந்த புதிய pTron பாஸ்பட்ஸ் ஜெட்ஸ் இயர்பட்ஸ் சாதனம் டச் கண்ட்ரோல் மற்றும் டிஜிட்டல் பேட்டரி இண்டிகேஷன் உடன் வருகிறது. இது சக்திவாய்ந்த பாஸ் அனுபவத்தை வழங்க 10mm ஆடியோ டிரைவர்களை கொண்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தரமான ஆடியோ அனுபவத்தை அனுபவிக்க முடியும்.

5 மணி நேரம் பேட்டரி

புதிய pTron பாஸ்பட்ஸ் ஜெட்ஸ் இயர்பட்ஸ் சாதனம் நீடித்து நிலைக்கு பேட்டரி உடன், 5 மணி நேரம் நீடித்து நிலைக்கும் பிளே பேக் நேரத்தைக் கொண்டுள்ளது. இதில் ப்ளூடூத் வெர்ஷன் 5.0 கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உங்கள் ஸ்மார்ட்போனுடன் வெகு விரைவில் பேரிங் ஆகிவிடும். இது போகக் கூடுதலாக இதில் வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சம், இன்-பில்ட் மைக், ஹாண்ட்ஸ் ஃபிரீ காலிங், IPX4 ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக