Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 16 மார்ச், 2021

ராசா., நம்பி பொறுப்ப கொடுக்குறோம்: நீங்களே ரோடு போடலாம்., சாலை பெயரையும் மாற்றலாம்- "கூகுள் மேப்" அப்டேட்!


சாலை பெயர்கள் தவறாக உள்ளதாக தகவல்

அண்ணா இந்த இடத்துக்கு எந்த பக்கம் போகலாம் என்று கேட்கும்போது, துல்லியமாக நமக்கு சந்தேகமே வராமல் வழியை சொல்லுவார்கள் ஆட்டோ ஓட்டுனர்கள். அந்த காலம் எல்லாம் மறைந்துவிட்டது என்றே கூறலாம். காரணம் இப்போது எங்கு போகவேண்டும் என்றாலும் உடனடியாக ஸ்மார்ட்போன்களை எடுத்து கூகுள் மேப்களை ஓபன் செய்வது வழக்கமாகி விட்டது.

டிஜிட்டல் இந்தியா கொள்கையை முன்னிருத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டிக்கெட் புக்கிங், பண பரிவர்த்தனையில் தொடங்கி பல்வேறு முக்கிய சேவைகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் தேவை பிரதானமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பல்வேறு ஆன்லைன் பயண புக்கிங் தளங்களில் டாக்ஸி டிரைவர்கள், ஆட்டோ ஓட்டுனர்களும் கூகுள் மேப் ஓபன் செய்து அதன்மூலம் சவாரி எடுத்து வருகின்றனர்.

இருப்பினும் கூகுள் மேப் பயன்பாட்டில் பல பழைய மற்றும் புதிய சாலைகள் தவறவிடப்பட்ட நிலையில் உள்ளது. அதேபோல் பயன்பாட்டில் சில சாலை பதிவுகள் தவறாகவும், பெயர்கள் தவறாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பயனர்கள் பலமுறை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சிக்கல்களை தீர்க்கும் வகைியல் கூகிள் வரைப்படத்தை அனைவரும் புதுப்பிக்கக் கூடிய வகையில் மூன்று புதிய வழிகளை சேர்ப்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளது. கூகுள் தனது வரைபட எடிட்டிங் அம்சத்தை புதுப்பித்து வருவதாகவும், புதிய அல்லது காண்பிக்கப்படாமல் இருக்கும் பழைய சாலைகளை சேர்க்கவும், தேவை இருக்கும் பட்சத்தில் வழிகளை மாற்றி அமைக்கவும் பயனர்களை அனுமதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த அம்சமானது வரும் காலக்கட்டங்களில் 80 நாடுகளில் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் வரைபடத்தில் சாலைகளை எவ்வாறு புதுப்பிப்பது, திருத்துவது என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம். கூகுள் மேப்ஸ் மாற்றை பயனர் கவனித்தால், கூகுள் மேப் சேவை ஓபன் செய்ய வேண்டும். அதில் மெனு பட்டனை கிளிக் செய்து ஓபன் செய்ய வேண்டும். பின் அதன் கீழ் பகுதியில் எடிட் மேப் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். எடிட் மேப் தேர்வை கிளிக் செய்த பிறகு காணாமல் போன சாலை என்ற தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும். மேப் கிளிக் செய்து சாலை இணைப்பு தேர்வை தேர்ந்தெடுத்து சப்மிட் செய்ய வேண்டும்.


கூகுள் வழங்கும் கூகுள் மேப் அப்டேட் ஆனது, கூகுள் மேப்பில் Drawing என்ற புதிய தேர்வு சேவையாகும். இதில் Missing Road, Add Road என்ற ஆப்சன் காண்பிக்கப்படும். நமக்கு அறிந்த சாலை குக்கிராமத்திலோ அல்லது வேறுபகுதியிலோ நேரில் இருக்கிறது. ஆனால் கூகுள் மேப்பில் இல்லை என்றால் Add என்ற பயன்பாட்டை கிளிக் செய்து Drawing டூடுலை கிளிக் செய்து வரையலாம். பின் அந்த சாலைக்கு பெயர் வைத்து சப்மிட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். நாம் சமர்பிக்கப்படும் சேவையை அடுத்த 7 நாட்களுக்குள் கூகுள் ரிவ்யூ செய்து சரியாக இருக்கும் பட்சத்தில் அது பதிவு செய்யப்படும்.

தேதிகள், காரணங்கள் மற்றும் திசைகளுடன் ஒரு சாலை மூடப்பட்டிருக்கிறதா என்பதை பயனர்கள் அறிந்துக் கொள்ளலாம். கூகுள் மேப் சேவையில் சென்று மெனு பட்டனை கிளிக் செய்தால் அதில் சாலைகளை சேர்க்கவோ, நீக்கவோ அல்லது மறுபெயரிடவோ முடியாது மாறாக பரிந்துரைகள், திருத்தங்கள் உண்மையானவையா மற்றும் துல்லியமானவையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கூகுள் கூறுகிறது. ஏழுநாட்களில் பயனர்கள் சமர்ப்பிப்பை கூகுள் சரிபார்க்கும் என தெரிவிக்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக